தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஷாலினி, பின்னர் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர். காதலுக்கு மரியாதை, அலைபாயுதே, கண்ணுக்குள் நிலவு போன்ற வெற்றி படங்களில் நடித்த இவர், 2000 ஆம் ஆண்டு நடிகர் அஜித் குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த அமர்க்களமான ஜோடி, ரசிகர்களின் மனதில் இன்னும் இடம் பிடித்துள்ளனர்.
திருமணத்திற்குப் பின் திரைத்துறையில் இருந்து விலகிய ஷாலினி, முழுமையாக குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தினார். அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரு பிள்ளைகளின் தாயாக இருக்கும் ஷாலினி, சமூக ஊடகங்களில் சில சமயங்களில் மட்டுமே தோன்றுபவர்.
இந்நிலையில், இன்று ஷாலினியின் 43வது பிறந்த நாளையொட்டி, அவருடைய சொத்து மதிப்பு தொடர்பான தகவல் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அதன்படி, ஷாலினிக்கு தற்போது ரூ.50 கோடிக்கு சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. சிறுவயதில் முதல் சினிமாவில் நடித்து வந்த இவர், தனது கடைசி திரைப்படத்திற்காக ரூ.50 லட்சம் வரை சம்பளம் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவருடைய கணவர் அஜித் குமாரும் தமிழ் சினிமாவின் அதிக சம்பளம் பெறும் முன்னணி நடிகர்களில் ஒருவர். ஒரு படத்திற்கே ரூ.130 கோடி வரை சம்பளம் வாங்கும் அஜித்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.300 கோடிக்கு மேல் இருக்கிறது என்று கூறப்படுகிறது.
இதனால், இந்த ஜோடி சேர்த்து வைத்திருக்கும் மொத்த செல்வம் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ரசிகர்கள் மட்டும் அல்லாமல் திரை உலகமும், ஷாலினியின் சொத்து மதிப்பை கேட்டு ஆச்சரியத்தில் உள்ளனர்.