கடந்த இரு தினங்களுக்கு முன்பு இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் (Director Shankar Daughter Marriage) ஐஸ்வர்யாவுக்கும், தருண் கார்த்திகேயன் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில், முதல்வர் ஸ்டாலின், ரஜினிகாந்த், கமலஹாசன், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், மணிரத்னம், நயன்தாரா, விக்னேஷ் சிவன், ரகுல் ப்ரீத் சிங், லோகேஷ், விக்ரம், சிரஞ்சீவி, ராம்சரன், ஏ ஆர் ரஹ்மான், அனிரூத் இன்னும் பல திரைப்பிரபலங்கள் கலந்துக்கொண்டு நேரில் திருமண வாழ்த்துகளை தெரிவித்தனர்.
திருமணத்திற்கு பிறகு வரவேற்பிலும் மேலும் பல திரைப்பிரபலங்கள் கலந்துக்கொண்டு நேரில் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தற்போது இயக்குனர் சங்கரின் மருமகன் யார் என்பது பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. முதலில் தருண் (Director Shankar Son in Law Profession in Tamil) இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனர் என்ற தகவல் வெளிவந்தது. ஆனால் தருண் ஷங்கரின் உதவி இயக்குனரே அல்ல. அமெரிக்காவில் ஐடி படித்தவர். தருண் அப்பா அமெரிக்காவில் ஐடி கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார்.
தருண் சினிமாவில் பணியாற்ற ஆசைப்பட்டு இந்தியா வந்துள்ளார். இயக்குனர் ஹரியும், தருணின் தந்தைையும் நல்ல நண்பர்கள். அந்த நட்பால் தருண் இயக்குனர் ஹரியிடம் ரத்னம் படத்தின் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். இந்த தகவலை தருண் பத்திரிக்கையாளர்களிடம் பகிர்ந்துள்ளார். மேலும் இவர் நடிகை நளினியின் உறவினராவார்.
இதன்மூலம் தருண் (Director Shankar Son in Law) இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க: Siren Movie OTT Release Date: மக்களால் அதிகம் விரும்பப்பட்ட சைரன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. |