இந்திய கிரிக்கெட் உள்ள இளம் வீரர்களில் முக்கிய வீரராக உள்ளவர் தான் சிரேயாஸ் ஐயர். இவர் தன்னுடைய சிறப்பான விளையாட்டு மூலம் பல போட்டிகளில் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் சமீபத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதலிரண்டு போட்டியில் இடம் பிடித்த சிரேயஸ் ஐயர் தன்னுடைய மேசமான விளையாட்டு காரணமாக அடுத்தப்போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில் தான் நாளை ரஞ்சி டிராபி (Ranji Trophy 2024) தொடருக்கான காலிறுதி போட்டிகள் தொடங்கவுள்ளன. இந்த தொடரில் விதர்பா – கர்நாடகா, மும்பை – பரோடா, தமிழ்நாடு – செளராஷ்டிரா, மத்திய பிரதேசம் – ஆந்திர பிரதேசம் முதலிய அணிகள் மோதவுள்ளன.
சில நாட்களுக்கு முன்பு தான் இந்திய அணியின் வீரர் இஷான் கிஷன் ரஞ்சி விளையாடாமல் ஓய்வில் இருந்தார். இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் ரஞ்சி டிராபி தொடரில் விளையாடாமல் ஐபிஎல் தொடருக்கு முக்கியத்துவம் கொடுத்து தெரியவந்தது. இதன் காரணமாக பிசிசிஐ காயத்தில் இல்லாத வீரர்கள் தவிர அனைத்து வீரர்களும் ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாட வேண்டும் என்று அறிவுறுத்தியது.
இந்நிலையில் தான் தற்போது தனக்கு ஏற்பட்ட முதுகு பிடிப்பு காரணம் ரஞ்சி போட்டியில் இருந்து விலகியுள்ளார். போட்டியில் முக்கிய வீரராக உள்ள ஸ்ரேயாஸ் ஐயரும் (Shreyas Iyer)காயத்தை காரணம் காட்டி ரஞ்சி கோப்பை தொடரிலிருந்து விலகியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அவரை பரிசோதித்து அறிக்கை சமர்ப்பிக்கும் படி என்சிஏவிற்கு பிசிசிஐ உத்திரவிட்டிருந்தது.
இந்த பரிசோதனையின் முடிவில், ஸ்ரேயாஸ் ஐயருக்கு எந்த விதமான புதிய காயங்களும் ஏற்படவில்லை என்றும் மேலும் அவர் முழுமையான உடற்தகுதியுடன் இருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக தான் ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தை காரணமாக கூறி ரஞ்சி கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இதையும் படியுங்கள்: IPL 2024: ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகும் முக்கிய வீரர்..! காரணம் என்ன? |