Chitra Pournami: நம் முன்னோர்கள் ஜோதிடத்தை அறிவியலை வைத்து 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள் என அனைத்தையும் வகுத்து வைத்துள்ளனர். பல தொழில்நுட்பங்களை கண்டுப்பிடிப்பதற்கு முன்பு நம் முன்னோர்கள் இந்த பிரபஞ்சத்தை கணக்கிட்டு, சூரியன், சந்திரன் நகர்வுகளை கணித்து மாதங்களை கணக்கிட்டு வந்துள்ளனர். தற்போது நவீன தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் இவர்கள் வகுத்து வைத்துள்ளதை போன்று துல்லியமாக எப்படி அந்த காலத்திலே இவ்வாறு வகுத்து வைத்துள்ளனர் என்று ஆச்சரியம் தான் ஏற்படும்.
அந்த வகையில் மாதம் முழுவதும் அமவாசை, பெளர்ணமி போன்றவைகள் வந்தாலும் அதிலும் சிறப்பு வாய்ந்ததாக சில பெளர்ணமி, அமவாசை கடைப்பிடிக்கப்படுகிறது. அவ்வாறு சிறப்பு வாய்ந்த சித்ரா பெளர்ணமி பற்றி இந்த பதிவில் (Chitra Pournami in Tamil) பார்க்கலாம்.
Table of Contents
சித்திரை மாதம் – What is Chitra Pournami in Tamil
நமது தமிழ் மாதங்கள் சூரியனை அடிப்படையாக கொண்டு தான் (Chitra Pournami Special) வகுக்கப்பட்டுள்ளது. சூரியபகவான் ராசியில் முதல் ராசியான மேஷ ராசியில் சஞ்சரிக்கும் மாதம் தான் சித்திரை மாதம். இதை தான் நாம் தமிழ் மாதத்தின் முதல் மாதமாக கொண்டாடுகிறோம். தமிழர்களின் வருடப்பிறப்பாகவும் நாம் இதை கொண்டாடுகிறோம். சித்திரை மாதத்தில் வரும் சித்திரை நட்சத்திரமும், பெளர்ணமியும் சேர்ந்ததை தான் நாம் சித்ரா பெளர்ணமி என்று குறிப்பிடுகிறோம்.
தமிழர்கள் இந்த சித்ரா பெளர்ணமியை தொன்று தொட்டு கொண்டாடி வருகின்றன. அதற்கு சான்றாக திருச்சி மலைக்கோட்டையில் உள்ள விநாயகர் கோயிலிலும், திருச்சியில் உள்ள நெடுங்கலாதர் கோயிலிலும் கல்வெட்டுகள் உள்ளன. திருச்சி மலைக்கோட்டையில் உள்ள பத்தாம் ஆண்டு ராசராச சோழனின் கல்வெட்டில் சித்ரா பெளர்ணமிக்கு அவர் நிவர்த்தம் கொடுத்த குறிப்புகள் உள்ளன. இதன் மூலம் நம் முன்னோர்கள் சித்ரா பெளர்ணமியை கொண்டாடி வருவது தெரிய வந்துள்ளது.
சித்ரகுப்தர் பிறந்தநாள் – Chitragupta in Tamil
சித்ரா பெளர்ணமி அன்று சித்ரகுப்தர் பிறந்துள்ளார் என்று புராணங்கள் கூறுகின்றனர். மற்றொரு புறம் இவரின் திருமண நாள் என்றும் இரு வேறு கருத்துகள் உள்ளன. இவர் எமலோகத்தில் எமதர்மராஜாவிடம், பாவப்புண்ணியக்கணக்கு எழுதும் எழுத்தாளராக பணியாற்றுகிறார். பார்வதி தேவி அவர் வரைந்த ஓவியம் (சித்திரம்) தான் இந்த சித்ரகுப்தர். தேவி வரைந்த ஓவியத்தை சிவபெருமானிடம் கொடுத்து இந்த சித்திரத்தை உயிர்ப்பித்து தாருங்கள் என வேண்டிக்கொண்டார். அவரும் உயிர்ப்பித்து கொடுத்தார். அவர் சித்ரா பெளர்ணமி அன்று உயிர்பித்ததால் இவருக்கு சித்ரகுப்தர் என்று பெயர் வந்ததாக புராணங்கள் கூறுவதாக ஐதீகம்.
இந்த சித்ரா பெளர்ணமி அன்று சித்ரகுப்தர் வழிபாடு நடத்தி வந்தால், அவர் சிவன் அருளை பெறுவதற்கு அருள் புரிவார் என கூறப்படுகிறது. இவருக்கு விரதம் இருந்து வேண்டி வந்தால் கேதுவால் ஏற்பட்ட தோஷம் நீங்கும் எனவும், மனகஷ்டம் நீங்கும் எனவும் கூறப்படுகிறது. காஞ்சிபுர மாவட்டத்தில் ராஜவீதியில் சித்ரகுப்தர் அவருக்கு தனிக்கோயில் உள்ளது. சித்ரா பெளர்ணமி அன்று அவருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
சித்ரா பெளர்ணமி விரதம் மற்றும் வழிபடும் முறைகள் – (Pournami Viratham Benefits in Tamil)
சித்ரா பெளர்ணமிக்கு (chitra pournami viratham in tamil) முதல் நாள் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். முக்கியமாக பூஜை அறையை சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். சித்ரா பெளர்ணமி அன்று சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்றைய தினம் சிவன் கோயிலுக்கு சென்று அங்கு நடக்கும் அபிஷேகங்களில் கலந்துக்கொண்டால் மனநிம்மதி பெற்று சிவன் அருள் பெறலாம்.
அதிகாலை எழுந்து குளித்துவிட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வைக்க வேண்டும். விநாயகர் படத்திற்கு முன்பு ஒரு நோட்டில் “சித்ரகுப்தன் படி அளக்க” என எழுதி வைத்து வழிபடலாம். அவ்வாறு வழிபட்டால் அவர் நமது பாவப்புண்ணிய கணக்குகளை கொண்டு சிவன் அருளை பெறச் செய்வார் என்பது நம்பிக்கை.
பொதுவாக பெளர்ணமி நாளன்று அன்று கிரிவலம் செல்வார்கள். இந்த சித்ரா பெளர்ணமி அன்று கிரிவலம் சென்றால் மிகவும் சிறப்பு. திருவண்ணாமலை போன்ற மலை கோயில்களுக்கு கிரிவலம் செல்வது சிறப்பு. சித்ரா பெளர்ணமி அன்று சிவன் அருளை பெற திருவண்ணாமலை கிரிவலம் செல்லலாம்.
நைவேத்தியம்
சித்ரா பெளர்ணமி அன்று அம்பாளுக்கு விளக்கேற்றி வைத்துவிட்டு, மஞ்சள் கலந்த சாதம் படைக்கலாம். பானகம், சக்கரைப்பொங்கல் அல்லது வெண்பொங்கல் அதனுடன் தேங்காய், மாங்காய், பழங்கள் போன்றவற்றை படையலாக வைத்து வழிபடலாம்.
எல்லா தானங்களையும் விட சிறந்தது அன்னதானம் என கூறுவார்கள். இதுபோன்ற தினங்களில் இயலாதவர்களுக்கு ஒருவேளை சாப்பாடு வாங்கி கொடுக்கலாம். இதனால் நீங்கள் செய்த முன்ஜென்ம பாவங்கள் குறைந்து புண்ணியக்கணக்கில் சேரும் என்பது நம்பிக்கை. தயிர், மோர், எலுமிச்சை சாறு போன்றவற்றை கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கலாம். இதனால் உங்களுக்கு மனநிம்மதியும், புண்ணியமும் வந்து சேரும்.
சித்ரா பெளர்ணமி அன்று சித்திரை நட்சத்திரத்துடன் பெளர்ணமி திதியும் சேர்ந்து வருவதால் கடல்களில் நீராடுவது மிகச்சிறப்பு. அன்று கடலில் நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
சித்ரா பௌர்ணமி- FAQS
1. சித்ரா பௌர்ணமி 2024 தேதி? Chitra Pournami 2024 Date?
சித்ரா பௌர்ணமி ஏப்ரல் 23, 2024, செவ்வாய்கிழமை வருகிறது.
2. சித்ரா பௌர்ணமி 2024 நேரங்கள்Chitra? Pournami 2024 Timings?
பௌர்ணமி திதி ஆரம்பம் – ஏப்ரல் 22, (2024) அன்று மாலை 05:55
பௌர்ணமி திதி முடிவடைகிறது – ஏப்ரல் 23, (2024) அன்று இரவு 07:48
3. சித்ரா பௌர்ணமி ஏன் சிறப்பு? Why is Chitra Pournami special?
சித்ரா பௌர்ணமி தீய செயல்களில் இருந்து விலகி உண்மை மற்றும் நேர்மையின் பாதையில் செல்ல மக்களுக்கு நினைவூட்டுகிறது. பரிகாரம் மற்றும் நேர்மையான பிரார்த்தனை மூலம் பாவங்களை சுத்தப்படுத்தும் நாள் இது.