Rama Navami: இந்து இதிகாசங்களின் படி நம் நாட்டில் பல விதமான பண்டிகைகளை நாம் கொண்டாடி வருகின்றோம். நம் இதிகாசங்கள் ஆன்மீக ரீதியான ஒன்றாக தான் உள்ளது. இதனை பலர் ஏற்றும், சிலர் மறுத்தும் வருவது நாம் அறிந்த ஒன்று தான். இதிகாசம் என்பது உண்மையில் ஒரு நிகழ்வு வரலாற்றில் நடந்தது என்பதை குறிப்பதாகும். அது ஒரு நீதிநெறியை விளக்குவதாகவும், கடவுள் அவதாரத்தை குறிப்பதாகும் அல்லது ஒரு வீரர் நடத்திய வீரச்செயல்களை பற்றி குறிப்பதாகும் இருக்கும்.
இந்து சாஸ்திரங்களின் படி நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ள எந்த ஒரு சாஸ்திரங்களையும் நாம் மூடநம்பிக்கை என்று கூறிவிட முடியாது. அதற்கான சான்றுகளும், கல்வெட்டுகளும் இன்றளவும் நாம் கண்கூடாகதான் பார்த்து வருகிறோம். அந்த வகையில் நம் இந்து சாஸ்திரத்தின் படி நாம் இதிகாசங்கள் என்று இராமயாணத்தையும், மகாபாரதத்தையும் கூறுகிறோம். அந்த வகையில் உலக முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் இராம நவமியை பற்றி நாம் இந்த பதிவில் (Rama Navami in Tamil) ராம நவமியின் வரலாறும்..! முக்கியத்துவமும்..! காண்போம்.
Table of Contents
இராம நவமி – Rama Navami
விஷ்ணுவின் 7-வது அவதாரமாக கருதப்படுபவர் தான் இராமபிரான். இவரின் பிறந்த நாளை தான் நாம் இராம நவமி (Rama Navami Meaning In Tamil) என்று வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறோம். இந்த பண்டிகை சைத்ர நவராத்திரியின் ஒரு பண்டிகையாகும். இது சுக்ல பட்ச அல்லது வளர்ப்பிறையில் சித்திரை மாதத்தில் வரும் ஒன்பதாம் நாள் நவமியில் கொண்டாடப்படுகிறது. இதனால் தான் இதனை சித்திரை மாத சுக்ல பட்ச நவமி என்று அனைவரும் அழைத்து வருகின்றனர். ஒன்பதாம் நாள் இறுதியில் சித்திரை நவராத்திரி கொண்டாடப்படுகிறது. எனவே இந்த காலக்கட்டம் முழுவதும் இராம நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த நவமி நாளில் இந்தியாவில் உள்ள ஒரு சில மாநிலங்களில் அரசு ஊழியர்களுக்கு விருப்ப விடுமுறையாக அளிக்கப்படுகிறது.
இவ்வாறு இராம நவமி இராமனின் பிறந்தநாளக கொண்டப்பட்டு (Rama Navami Endral Enna) வரும் வேளையில், தென்னிந்தியாவில் உள்ள மக்கள் இராம நவமியை இராமன், சீதையின் திருமண நாளாக கொண்டாடப்பட்டு வருகின்றனர்.
இராமபிரான் நவமி திதியில் பிறந்ததற்கான காரணம்?
பொதுவாக இந்து சாஸ்திரங்களின் படி எந்த ஒரு நல்ல காரியத்தையும் அஷ்டமி திதியிலும், நவமி திதியிலும் தொடங்க மாட்டோம். அந்த இரண்டு தினங்கள் மட்டும் நாம் செய்ய நினைக்கும் காரியங்களை 2 நாட்கள் கழித்து செய்வோம். இதனால் வருத்தப்பட்ட அஷ்டமியும், நவமியும் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அதாவது தங்களின் கவலையை தெரிவித்தனர். அஷ்டமி ததியிலும், நவமி திதியிலும் யாரும் எந்த ஒரு நல்ல காரியங்களையும் செய்ய முன்வர பயப்படுகிறார்கள். எங்களை ஒதுக்கிவிடுகிறார்கள் என்று கவலையை தெரிவித்தனர்.
மகாவிஷ்ணு அப்போது உங்களை அனைவரும் கொண்டாடும் காலம் வரும் எனவே நீங்கள் காத்திருக்க வேண்டும் என தெரிவித்தார். எனவே மகாவிஷ்ணு தன்னுடைய ஏழாவது அவதாரமாக இராமவதாரத்தை நவமியிலும், கிருஷ்ண அவதாரத்தை அஷ்டமியிலும் எடுத்தார். அன்றிலிருந்து தான் நாம் கோகுலாஷ்டமியும், இராம நவமியும் கொண்டாடி வருகின்றோம்.
இராம நவமி கொண்டாட்டம்
பொதுவாக இராம நவமி கொண்டாட்டம் இராமனின் பிறப்பு என்பதால், இராமபிரானின் குழந்தை தெய்வ உருங்களை வாங்கியும், அதற்கு ஏற்ற உடைகளை, அலங்காரங்களை செய்தும், இராமபிரானை தொட்டிலில் வைத்தும் மக்கள் வீடுகளில் வழிபாடு நடத்தி வருகின்றனர். ஒரு சிலர் ஆலயங்களுக்கு சென்று அங்கு நடைபெறும் வழிபாட்டில் கலந்துக்கொள்கிறார்கள்.
ஒரு சிலர் வீடுகளில் பூஜைகள் மற்றும் பஜனைகள் நடத்தி ஆராத்தி எடுத்து உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். ஒரு சிலர் இந்த இராம நவமியில் இயலாதவர்களுக்கு தொண்டுகள் செய்து அதன் மூலம் இராம பிரானை வழிப்பட்டு வருகிறார்கள். இந்நாளில் பெரும்பாலான மக்கள் விரதங்கள் மூலம் இராமனின் அருளை பெறுகிறார்கள்.
மேலும் இந்த நாளில் இராமன், லெட்சுமணன், சீதை, அனுமன் ஆகியவர்கள் உள்ள ஆலயங்களிலும், அனுமன் ஆலயங்களிலும் சிறப்பு ஆராதனைகள் மற்றும் பூஜைகள் இராம நவமியில் நடைபெறும். இந்நாளில் பக்தர்கள் சிறப்பு பூஜைகளில் கலந்துக்கொள்வார்கள்.
இராம நவமி கொண்டாடப்படும் இடங்களும் முக்கியத்துவமும்
இராம நவமி மேலே குறிப்பிட்டுள்ளப்படி பூஜைகள் மற்றும் பஜனைகள் நடத்தி கொண்டாடப்படுகிறது. எனினும் ஒவ்வொரு மாநிலங்களில் உள்ள ஆலயங்களுக்கு ஏற்றவாறு கொண்டாடப்படுகிறது. இராம நவமி இராமனின் பிறப்பு என்றாலும், இராமயணத்தின்படி சீதை, லெட்சுமணன், அனுமன் ஆகியோர் இந்த இராம நவமியின் குறிப்பிடத்தகவர்கள். அதனால் இராம நவமியின் சிறப்புகளில் இவர்கள் முக்கியமானவர்களாக கருதப்படுகிறார்கள்.
அதன்படி இராமயணத்தில் குறிப்பிட்டுள்ளபடி இராமனின் வாழ்க்கையில் முக்கியமான நகரங்களாக பார்க்கப்பட்டது அயோத்தி (உத்தர பிரதேசம்), இராமேஸ்வரம் ( தமிழ்நாடு ), பத்ராச்சலம் ( தெலங்காணா ) சீதாமர்ஹி (பீகார்). இந்த நகரங்களில் இராம நவமி சிறப்பானதாக கொண்டாடப்படுகிறது. இந்த இடங்களில் யாத்திரைகளுகும், ஒரு சில இடங்களில் இராமன், சீதா திருமண நிகழ்வும் நடத்தப்படுகிறது.
மேலும் படிக்க: 7,000 பிரபலங்களுக்கு அழைப்பு..! விமர்சையாக நடைபெறவுள்ள ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சி..! |
சித்திரை மாத சுக்ல பட்ச நவமியில் இராமனை நினைத்து இராமாயணம் படிப்பதன் மூலமும் ஒரு சிலர் இராம நவமியை அனுசரிக்கிறார்கள். சில ஆலயங்களில் மாலையில் இராமாயண நிகழ்ச்சியும், சொற்பொழிவு நிகழ்ச்சியும் அரங்கேற்றி இராமபிரானின் மகத்துவத்தை மற்றவர்களுக்கும் தெரிந்தக்கொள்ளுப்படியும், வழிபாடு நடத்தி வருகிகறார்கள்.
தென்னிந்தியாவில் கொண்டாடப்டும் இராம நவமி
தென்னிந்தியாவில் இராம நவமி இராமனின் பிறப்பாக கருதாமல், அவரின் திருமண நாளாக கொண்டாடி வருகிறார்கள். ஆந்திர பிரதேசத்தில் உள்ள பத்ராச்சலம் என்ற நகரில் நடத்தப்படும் கல்யாணம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். மேலும் தமிழ்நாட்டிலும் உள்ள இராமர் கோயில், அனுமன் ஆலயங்களில் இராம நவமி நாட்கள் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது.
ராம நவமி விரதம் முறைகள்
இராம நவமி (Rama Navami Vratham) முதல் நாள் வீட்டையும், பூஜை அறையும் சுத்தம் செய்ய வேண்டும். ராம நவமி அன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு இராமன் சீதை, அனுமன் படத்திற்கு மஞ்சள் குங்குமம் வைத்து விளக்கேற்றி வழிபட வேண்டும். துளசி மாலை கட்டி அனுமனுக்கு அணிவித்து வழிபடலாம். வெற்றிலை லட்டு, இனிப்புகள் செய்து நெய்வேத்தியமாக கடவுளுக்கு படைக்கலாம்.
அன்று விரதம் இருப்பவர்கள் உணவு எடுத்துக்கொள்ளாமல், நீர்மோர் எடுத்துக்கொண்டு தண்ணீர் அருந்தி மாலையில் வழிபாடு முடித்துவிட்டு உணவு உட்கொள்ளலாம். அன்றைய தினம் இராமாயணம் படிக்கலாம். இராம நாமம் சொல்லி இராமபிரானை மனதில் நினைத்து வழிபடலாம்.
விரதம் பலன்கள்
இராம நவமியில் விரதம் (Ram Navami Fast In Tamil) இருப்பவர்களுக்கு அனுமனின் அருள் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைத்திருக்கும். எதிரிகளின் தொல்லை குறையும். மனநிம்மதி கிடைக்கும். பகைவர்களும் நண்பர்களாவார்கள். கடன் தொல்லை குறையும். ஆரோக்கிய பிரச்சனைகள் நிவர்த்தியாகும்.
அயோத்தியில் இராம நவமி
இராமர் பிறந்த இடமாக பார்க்கப்படும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் தேதி குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு திறக்கப்பட்டது. அதாவது உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோவில் மொத்தம் 1800 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு, மொத்த நிலப்பரப்பு சுமார் 2.7 ஏக்கர் ஆகும். இதில் 57,400 சதுர அடியில் ராமர் கோயில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. கோயிலின் கருவறையில் குழந்தை ராமர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த குழந்தை ராமர் சிலை ஆனது 8 அடி உயரம், 3 அடி நீளம் மற்றும் 4 அடி அகலம் கொண்டதாகும்.
ராமர் கோயில் கட்டப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு கொண்டாடப்படும் முதல் ராம நவமி இதுவாகும். அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள பால ராமர் கோயிலில் (Ayodhya ramar temple festival 2024) இன்று ராம நவமி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனால் இந்த வருடம் வரும் இராம நவமி சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இராம நவமி நாள் மற்றும் நேரம்
இது மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் வரும் சைத்ராவின் 9 வது நாளில் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, ராம நவமி ஏப்ரல் 17 -ம் தேதி அன்று கொண்டாடப்படும். த்ரிக் பஞ்சாங்கத்தின் படி நவமி திதி ஏப்ரல் 16 -ஆம் தேதி அன்று மதியம் 01:23 மணிக்கு தொடங்கி ஏப்ரல் 17 அன்று மாலை 03:14 மணிக்கு முடிவடைகிறது.
ஸ்ரீராம நவமி – FAQS
1. ஸ்ரீராம நவமியின் சிறப்பு என்ன? What is special about Sri Rama Navami?
இந்நாளில் ராமர் அயோத்தி நகரில் சரயு நதிக்கு அருகில் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. ஸ்ரீ ராமர், அவரது மனைவி சீதா மற்றும் அவரது எதிரி ராவணன் ஆகியோரின் வாழ்க்கை நிகழ்வுகளில் எழுதப்பட்டுள்ளது. ஆண்டு முழுவதும் இரண்டு முக்கிய ராம நவமி கொண்டாட்டங்கள் உள்ளன.
2. ஸ்ரீராம நவமியில் எதை தவிர்க்க வேண்டும்? What should be avoided on Sri Rama Navami?
ராம நவமி (Rama Navami fasting rules) விரதத்தின் போது அசைவ உணவுகளை உட்கொள்வது கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். பக்தர்கள் சைவ உணவையே பின்பற்ற வேண்டும்.
3. ராம நவமி என்றால் என்ன? What is Ram Navami called?
விஷ்ணுவின் ஏழாவது அவதாரம் என்றும் அழைக்கப்படும் இந்து மதத்தில் மிகவும் பிரபலமான தெய்வங்களில் ஒன்றான ராமரின் பிறப்பைக் கொண்டாடும் இந்து பண்டிகையாகும்.
4. ராம நவமி எந்த மாநிலத்தில் பிரபலமானது? In which state Ram Navami is famous?
அயோத்தி, உத்தரபிரதேசம்.
2024 – ஆம் ஆண்டில் இராம நவமி எப்போது? When is Rama Navami in 2024?
இந்த ஆண்டு (Rama Navami 2024), ராம நவமி ஏப்ரல் 17, 2024 புதன்கிழமை வருகிறது.