சினிமா

Singapore Saloon Box Office Collection: வசூல் இத்தனை கோடிகளா?

ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் கடந்த ஜனவரி 25 ஆம் தேதி சிங்கப்பூர் சலூன் (Singapore Saloon Box Office Collection) என்ற திரைப்படம் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் வெளியாகி இரண்டு நாட்களே ஆகிறது இந்த நிலையில் சிங்கப்பூர் சலூன் படத்தி வசூல் குறித்த தகவல் வெளியாக உள்ளது. இதன் வசூல் எவ்வளவு தெரியுமா?

ஆர்.ஜே. வாக இருந்து அதன் பிறகு படங்களில் நகைச்சுவை நடிகராக மாறிய ஆர். ஜே. பாலாஜி. அதன் பிறகு இவர் நாயகனாகவும் படங்களில் நடித்துள்ளார். அவ்வாறு RJ Balaji நடித்த படங்கள் தான் எல்,கே.ஜி., மூக்குத்தி அம்மன். வீட்ல விஷேசம் மற்றும் ரன் பேபி ரன் போன்ற படங்கள். இந்த படங்கள் மூலம் அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார். இவர் தற்போது நாயகனாக நடித்து (RJ Balaji New Movie) வெளியாகி உள்ள படம் தான் Singapore Saloon.

இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய கோகுல் இந்த சிங்கப்பூர் சலூன் படத்தை இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தினை வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் விவேக்-மெர்வின் (Vivek–Mervin) இசையமைத்துள்ளார்கள்.

இந்த படத்தில் ஆர். ஜே. பாலாஜி கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் உடன் இணைந்து சத்யராஜ், மலையாள நடிகர் லால், கிஷன் தாஸ், தலைவாசல் விஜய், ஆன் ஷீத்தல், ஜான் விஜய் மற்றும் ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வீட்ல விசேஷம் படத்திற்கு பிறகு RJ Balaji மற்றும் Sathyaraj இருவரும் இந்த படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர் என்பது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்த படத்தின் கதை என்னவென்றால் ஒரு இளம் சிகை அலங்கார நிபுணர் பற்றியது ஆகும். இந்த படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி ரசிகர்களின் கவனத்தையும் பேராதரவையும் பெற்றுள்ளது. உலக அளவில் முதல் நாள் (25.01.2024) வசூல் ஆக சிங்கப்பூர் சலூன் திரைப்படம் ரூபாய் 1 கோடி பெற்றுள்ளது. அதேபோல் இந்த படத்தின் இரண்டாம் நாள் வசூல் ரூபாய் 1.64 கோடி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தமாக இரண்டு நாட்களில் உலக அளவில் (Singapore Saloon Box Office Collection) ரூபாய் 2.64 கோடி பெற்றுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: விஜய் உடனான போட்டி குறித்து மனம் திறந்த சூப்பர் ஸ்டார்..! என்ன கூறினார் தெரியுமா?
Abinaya G

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago