Homeசினிமாசூர்யா படநடிகையுடன் வெள்ளித்திரையில் இணையும் சிறகடிக்க அசை மனோஜ்..!

சூர்யா படநடிகையுடன் வெள்ளித்திரையில் இணையும் சிறகடிக்க அசை மனோஜ்..!

பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் மனோஜ் என்னும் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் தான் ஸ்ரீ தேவா. இப்போது இவர் வெள்ளித்திரையில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு நடிகர் ஸ்ரீ தேவா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புது கெட்டப்பில் புதிய தொடக்கம் என்று ஒரு பதிவை பதிவிட்டு இருந்தார்.

இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். சீரியல் மட்டுமின்றி அந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். அதிலும் இந்த சீரியலில் மனோஜ் கேரக்டரில் நடிக்க நடிகர் ஸ்ரீ தேவா செய்யும் வேலைகளால் மக்கள் அவரை திட்டி தீர்த்தாலும் அவருக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கதான் செய்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது இவர் சினிமாவில் நடிக்க இருக்கும் செய்தி (Siragadikka Aasai Manoj New Movie Update) வெளியாகியுள்ளது. இந்த தகவலை அறிந்த அவரது ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள். இவருடைய ஆரம்ப காலகட்டத்தில் பல சீரியல்களுக்கான ஆடிஷன்களுக்கு சென்று அதிக முறை அவர் நிராகரிக்கப்பட்டுள்ளார்.

அதன் பிறகு ஸ்ரீ தேவா துணிவு திரைப்படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருந்தார். அதற்குப் பின்னர் தான் இவருக்கு சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட அவர் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இந்த நிலையில் தான் தற்போது அவருக்கு வெள்ளித்திரையில் நடிப்பதற்கான வாய்ப்பு (Siragadikka Aasai Actor Sri Deva New Movie) கிடைத்துள்ளது.

Siragadikka Aasai Manoj New Movie Update

இதன் மூலம் இவர் நடிகர் சூர்யாவின் படமான எதற்கும் துணிந்தவன் படத்தில் யாழ்நிலா என்னும் கதாபாத்திரத்தில் நடித்த திவ்யா துரைசாமியோடு இணைந்து நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்த அதிகாரப்பூர்வமான அப்டேட்டை அவர் விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: ரசிகர்களுக்கு காத்திருக்கும் பிரேமலு 2 வது பாகம்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular