இன்றைய காலகட்டத்தில் திரைப்டங்களை காட்டிலும் சீரியல்களே அதிக ரசிகர்களை கொண்டுள்ளது. எந்த அளவிற்கு என்றால் சீரியலில் நடைபெறும் அனைத்தும் நடிப்பு என்பதை அறிந்தும் சீரியலில் நடக்கும் பிரச்சனைகள் எல்லாம் நம் வீட்டில் நடப்பது போல் நினைத்து பலர் வருத்தபடுவதும் உண்டு. அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் சீரியல்கள் இடம்பிடித்து விட்டது.
பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றுதான் விஜய் தொலைக்காட்சி. இந்த டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் மிகவும் பிரபலம். இந்த சீரியல் அதிக அளவிலான ரசிகர்களை வைத்துள்ளது.
இந்த சீரியல் இவ்வளவு பிரபலமாக இருக்க முக்கிய காரணம் இந்த சீரியலின் கதாநாயகன் மற்றும் கதாநாயகிதான். இவர்களுடைய எதார்த்தமான நடிப்பு பலருக்கும் பிடித்த விதத்தில் உள்ளது. அதிலும் இந்த சீரியலின் கதாநாயகியான மீனா காதாபாத்திரத்தை பிடிக்காத ஆட்களே இல்லை என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். மக்கள் அனைவரும் இவரை (Siragadikka Aasai Meena)தங்களின் வீடுகளில் ஒருவராக பார்க்கும் அளவுக்கு பிரபலமாகிவிட்டார் மீனா.
இந்த சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் இவருக்கு பிரபலம் காரணமாக மலையாளம், தெலுங்கு என பழமொழிகளிலும் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. அதன்படி இவர் ஒரு மலையாள சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் தான் தற்போது இவர் விபத்தில் சிக்கி காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியது. இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவருக்கு மலையாள சீரியல் ஷூட்டிங் போது தான் இந்த விபத்து (Siragadikka Aasai Meena Accident) ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நடிகை கோமதி பிரியா தன் மலையாள சீரியலில் நடிக்கும் தன் தோழியுடன் பைக்கில் சென்றுக் கொண்டிருந்த போது எதிர்பாராமல் பைக் பிரேக் பிடிக்காததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தின் காரணமாக கோமதி பிரியாவின் காலில் சிறு காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பெரிய அளவில் எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இந்த தகவல் அவரது ரசிகர்களிடேயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்: சிறகடிக்க ஆசை: சீரியலை விட்டு விலகுகிறாரா முத்து..! என்ன நடந்தது? |