இந்த காலத்தில் திரைப்டங்களை காட்டிலும் சீரியல்களுக்கு தான் அதிக அளவிலான ரசிகர்கள் உள்ளனர். எந்த அளவிற்கு என்றால் சீரியலில் நடைபெறும் அனைத்தும் நடிப்பு என்பதை அறிந்தும் சீரியலில் நடக்கும் பிரச்சனைகள் எல்லாம் நம் வீட்டில் நடப்பது போல் நினைத்து பலர் வருத்தபடுவதும் உண்டு. அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் சீரியல்கள் இடம்பிடித்து விட்டது.
இது போன்ற சீரியல்களை ஒளிப்பரப்பும் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றுதான் விஜய் தொலைக்காட்சி. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் மிகவும் பிரபலம். இந்த சீரியல் அதிக அளவிலான ரசிகர்களை வைத்துள்ளது.
இவ்வளவு பிரபலமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சிறகடிக்க ஆசை சீரியல் தமிழ் மக்களிடையே தனி அங்கீகார்த்தையும் தனி ரசிகர் பட்டாளத்தையும் வைத்துள்ளது. இந்த நிலையில் தான் தற்போது இந்த சீரியல் குறித்த ஒரு சுவாராஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சிறகடிக்க ஆசை சீரியல் தமிழ் மொழியில் மட்டுமின்றி மலையாளம், மராத்தி, ஹிந்தி, தெலுங்கு என மொத்தம் நான்கு மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் தமிழ் மொழியில் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் பிரபலம் தான். அதிலும் இந்த சீரியல் மலையாளத்தில் மிகவும் பிரபலம். இந்த மலையாள சிறகடிக்க ஆசை சீரியலில் தமிழில் மீனாவாக நடிக்கும் கோமதி பிரியா தான் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் சிறகடிக்க ஆசை சீரியலின் டிஆர்பி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தமிழில் ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல்களில் சிறகடிக்க ஆசை சீரியல் 8. 18 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. அதேபோல தெலுங்கில் 8.91 புள்ளிகளுடனும், மலையாளத்தில் 11 புள்ளிகளுடனும் முதலிடத்தில் உள்ளது.
மேலும் மராத்தியில் 3.90 புள்ளிகளை பெற்றுள்ளது. அதேபாேல ஹிந்தியில் 1.05 புள்ளிகளை பெற்றுள்ளது. மராத்தி மற்றும் ஹிந்தியில் குறைவான டிஆர்பி புள்ளிகளை பெற்றிருப்பது போல இருந்தாலும், அந்த ஊர் டிஆர்பியில் இது அதிகம் தான் என்று கூறுகின்றனர்.
இதையும் படியுங்கள்: ரீ-என்ட்ரி கொடுக்கும் வினுஷா..! புது சீரியலின் பெயர் என்ன தெரியுமா? |