தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் ஜெயம் ரவி. இவரது படங்கள் அனைத்து நல்ல கதைக்களத்துடனும் அனைவரும் விரும்பி பார்க்கும் விதத்திலும் இருக்கும். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்து இருந்தார். அந்த படத்தில் இவரின் நடிப்பு பலரையும் கவர்ந்தது. இந்நிலையில் தான் தற்போது இவரின் நடிப்பில் சைரன் என்னும் திரைப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்தின் விமர்சனம் (Siren Movie Review) பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
இந்த சைரன் படத்தினை அறிமுக இயக்குனரான ஆண்டனி பாக்கியராஜ் இந்த படத்தினை இயக்குகிறார். மேலும் இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி இரட்டை கதாபாத்திரத்தில் நடித்த்துள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். முக்கியமாக நடிகை கீர்த்தி சுரேஷ் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த சைரன் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 1000 திரையில் திரையிடப்பட்டுள்ளது. எனவே இப்பதிவில் நாம் இந்த படம் குறித்த விமர்சனத்தை (Siren Thirai Vimarsanam) பார்க்கலாம்.
சைரன் படத்தின் கதை கரு
இந்த படத்தில் ஜெயம் ரவி குற்றவாளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவர் செய்யாத குற்றத்திற்காக 14 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். மேலும் இப்படத்தில் இவர் திலகன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் பரோலில் வெளியே வருகிறார். அந்த பரோல் நேரத்தை பயன்படுத்தி தன்னை சிறைக்கு அனுப்பியவர்களை பழிவாங்க நினைக்கிறார்.
இவர் மீது போலீஸ் அதிகாரியான நந்தினிக்கு(கீர்த்தி சுரேஷ்) சந்தேகம் ஏற்படுகிறது. இப்படத்தில் ஹீரோவான திலகனை ஒரு ஆம்புலன்ஸ் டிரைவராக காட்டியுள்ளனர். மேலும் இப்படம் முழுவதும் திலகனின் கடந்த காலம் மற்றும் நிகழ்காலத்தையும் மாற்றி மாற்றி காட்டிய விதம் படத்தை சுவாரஸ்யமாக்குகிறது.
பரோலில் வரும் திலகன் தன் வீட்டில் காலடி எடுத்து வைக்கும்போது முன்னதாக திருமணம் போன்ற அனைத்தையும் காட்டுகிறார்கள். இது பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது. மிகவும் அழகாக இவர் சிறையில் இருந்து வந்து தன் மகளை பார்க்கும் போது அந்த குழந்தை பிறந்த காட்சிகளை காட்டியுள்ளனர். இது மிகவும் உணர்வுபூர்வமாக உள்ளது.
சைரன் படத்தின் அம்சங்கள்
- இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமாரின் பாடல்கள் பெரிய பலம் உள்ளது.
- ஜெயம் ரவியின் நடிப்பு இந்த படத்தில் சிறப்பாக உள்ளது. நடுத்தர வயது ஆளாக சிறப்பாக நடித்திருக்கிறார்.
- ஆனால் கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரம் அந்த அளவிற்கு வலுவானதாக இல்லை. அவர் ஒரு சீரியஸான போலீஸ் அதிகாரியாக நடிக்க முயற்சி செய்திருக்கிறார் எனினும் அது அந்த அளவுக்கு கைக்கொடுக்கவில்லை.
- இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரனுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரன் நன்றாக உள்ளது. அந்த காதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை அவர் வழங்கியுள்ளார்.
- இந்த படத்தில் யோகி பாபுவின் காமெடி அந்த அளவிற்கு கை கொடுக்கவில்லை. மிகவும் சாதாரணமாக உள்ளது.
- இதில் முக்கிய கதாபாத்திரமாக ஜெயம் ரவியின் மகள் கதாபாத்திரத்தில் நடித்துள்ள யுவானாவின் நடிப்பு ரசிகர்களை கவரும் வகையில் உள்ளது. கொலை செய்துவிட்டு சிறைக்கு சென்ற அப்பா திலகனை பார்க்க மறுக்கும் அவரின் நடிப்பு சிறப்பாக உள்ளது.
- இப்படத்தில் ஜெயம் ரவியின் அம்மா கதாபாத்திரத்தில் துளசி நடித்துள்ளார். இவரின் நடிப்பு ரசிகர்களை கவரும் விதத்தில் உள்ளது.
- வில்லன் கதாபாத்திரங்களான சமுத்திரக்கனி, அழகம் பெருமாள், அஜய் ஆகியோரின் அந்த அளவிற்கு எடுபடவில்லை என்றுதான் கூறவேண்டும்.
இயக்குநர்: ஆண்டனி பாக்கியராஜ்
ஒளிப்பதிவாளர்: George Feuch
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ்
தயாரிப்பாளர்கள்: சுஜாத்தா விஜயகுமார்
Siren
Director: Anthony Bhagyaraj
Date Created: 2024-02-16 10:00
4.5
இதையும் படியுங்கள்: ஜோ படத்தின் திரைவிமர்சனம்..! |