தமிழ் திரையுலகில் உள்ள முக்கிய நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த நடிகராகவும் உள்ளார். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான அயலான் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தான் ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தின் இயக்குனருடன் மீண்டும் SK இணையவுள்ளார்.
சில வருடங்களுக்கு முன்பு வெளியான பிரின்ஸ் படம் பெரும் தோல்வியை சந்தித்தது. ஆனால் அதன் பிறகு மாவீரன், அயலான் என தொடரந்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்து மீண்டும் சிவகார்த்திகேயன் பார்முக்கு வந்துள்ளார். அயலான் படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் என்னும் படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்திற்கு பிறகு அவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் குறித்த தகவல்கள் எதும் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் தான் தற்போது அவருடைய அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அவர் நடிப்பில் கடைசியாக வெளியான அயலான் திரைப்படம் 75 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
அயலான் படத்திற்கு பிறகு அவரது நடிப்பில் அமரன் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் இந்திய ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் பயோபிக்காக உருவாகியுள்ளது.
இந்த அமரன் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். படத்தின் ஷூட்டிங் இரண்டு ஷெட்யூல்கள் முடிந்திருக்கின்றன. இந்த படத்தில் ருக்மிணி கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் தான் சிவகார்த்திகேயனின் புதிய படம் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
இந்த தகவலின் படி இவர் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற டான் படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தியுடன் (Cibi Chakravarthy) மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் சிபி இயக்கும் படத்தில் சிவா நடிக்கிறாரா இல்லை அந்த படத்தை தயாரிக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதையும் படியுங்கள்: நடிகர் சங்க கட்டட பணிக்கு ரூ.50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன்..! |