Homeசினிமாதல படத்தில் சிவகார்த்திகேயன்..! வைரலாகும் புகைப்படம்..!

தல படத்தில் சிவகார்த்திகேயன்..! வைரலாகும் புகைப்படம்..!

கோலிவுட் வட்டாரத்தில் முக்கிய கதாநாயகனாக இருப்பவர் தான் தல அஜித் குமார். இவர் முன்னணி நடிகரும் ஆவார். இவருக்கு உள்ள ரசிகர் பட்டாளம் பற்றி நாங்கள் சொல்ல வேண்டியது இல்லை. அதேபோல தான் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ள படத்தின் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித் குமார் இப்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் தற்போது இப்படத்தின் ஷூட்டிங் இந்தியாவில் உள்ள சில பகுதிகளில் நடக்கவுள்ளது. இவர் இறுதியாக நடித்த துணிவு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் தான் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் தான் அயலான்.இப்படத்திற்கு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது அடுத்த படத்தில் கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில் தான் சமூக வலைதளங்களில் அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து நடித்துள்ள படத்தின் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

இப்புகைப் படத்தில் அஜித்துடன் சிவகார்த்திகேயன் (Ajith Sivakarthikeyan Movie) நடித்துள்ளார். ஆனால் இந்த புகைப்படம் அவர்கள் ரசிகர்களுக்கு மிகவும் சர்ப்ரைஸாக அமைந்துள்ளது. இப்புகைப்படத்தில் ஸ்மார்ட்டான லுக்கில் அஜித் வர, அவருக்கு எதிரே கை நிறைய புத்தகங்களை சுமந்துகொண்டு சிவகார்த்திகேயன் நிற்கிறார்.

இதையும் படியுங்கள்: SK 22: இவங்கதா ஹீரோயினா..! இது எதிர்பார்க்காத காம்போவா இருக்கே..!

இந்த போட்டோவில் சிவகார்த்திகேயன் காலேஜ் ஸ்டூடண்ட் லுக்கில் உள்ளார். மேலும் ப்ரொபசர் கெட்டப்பில் அஜித் மாஸ் காட்டுகின்றனர். இந்த புகைப்படமானது அஜித்தின் ஏகன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட போட்டோ என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஏகன் திரைப்படம் (Aegan Movie Pic) அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் 2008-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆகும். இப்படத்தினை ராஜூ சுந்தரம் இயக்கியுள்ளார். ஆனால் இப்படம் வெற்றி பெறவில்லை. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ajith Sivakarthikeyan Movie
இதையும் படியுங்கள்: விபத்தில் சிக்கிய சிறகடிக்க ஆசை மீனா..! நடந்தது என்ன?
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular