தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் எஸ்.ஜே.சூர்யா. தற்போது இயக்கத்தில் இருந்து சற்று ஒதுங்கி இருக்கும் அவர் பிஸியான நடிகராக மாறி வருகிறார். இந்த நிலையில் தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாள திரையுலகிலும் நடிகராக அறிமுகமாக (SJ Surya in Malayalam Film) இருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.
கோலிவுட்டில் சில படங்களை மட்டுமே இயக்கி இருந்தாலும் இன்றுவரை பலரின் ஃபேவரைட் இயக்குநர்களில் ஒருவராக எஸ்.ஜே.சூர்யா இருக்கிறார். தல அஜித் கதாநாயகன் மற்றும் வில்லன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்த படம் வாலி இந்த படமே எஸ்.ஜே.சூர்யா இயக்கிய முதல் படம் ஆகும். வாலி திரைப் படத்திற்காக அவர் சம்பளமே வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வாலி படத்தின் வெற்றிக்குப் பிறகு எஸ்.ஜே.சூர்யா, விஜய் மற்றும் ஜோதிகா வைத்து குஷி என்ற படத்தை இயக்கினார். அந்த படம் மெகா ஹிட்டடித்த கோலிவுட்டின் கவனத்தை பெற்றார் எஸ்.ஜே.சூர்யா. அதன் பிறகு நியூ, அன்பே ஆருயிரே, இசை, மான்ஸ்டர் போன்ற படங்களை (SJ Surya Next Move) கதாநாயகனாகவும் நடித்தார்.
திரைப்பட இயக்கத்தில் இருந்து ஒதுங்கி தற்போது அதிக படங்களில் நடித்து வருகிறார் எஸ்.ஜே.சூர்யா. இறைவி, மாநாடு, மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா 2 போன்ற படங்களில் அசால்ட்டாக தனது நடிப்பின் மூலம் மக்களை கவர்ந்து வருகிறார் எஸ்.ஜே.சூர்யா. இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக அவர் நடித்துள்ள இந்தியன் 2, எல்ஐசி போன்ற படங்களி திரைக்குவர காத்திருக்கின்றன.
இந்த நிலையில் எஸ்.ஜே.சூர்யா மலையாள திரையுலகிலும் அறிமுகமாக உள்ளார் என்ற தகவல் (SJ Surya in Malayalam Movie) வெளியாகி உள்ளது. மலையாளத்தில் வெளிவந்த ஜெய ஜெய ஜெய ஹே படத்தை இயக்கிய விபின் தாஸ் புதிதாக இயக்க இருக்கும் படத்தில் தான் எஸ்.ஜே.சூர்யா நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்த படத்தில் ஃபஹத் பாசிலும் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.