பிரதமர் மோடி அவர்கள் சென்னைக்கு வர உள்ள நிலையில் பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக பள்ளி நிறுவாகங்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் இந்த செய்தி அங்குள்ள மக்களிடையே அச்ச்த்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள போரூரை அடுத்த மாங்காடு கெருகம்பாக்கத்தில் உள்ள பி.எஸ்.பி.பி பள்ளியில் வாரத்தின் முதல் நாள் என்பதால் வழக்கம் போல் பள்ளிக்கு மாணவர்கள் காலையில் வருகை தந்த வண்ணம் இருந்துள்ளனர். இந்த நிலையில் தான் பள்ளிக்கு மின்னஞ்சல் வழியாக வெடிகுண்டு மிரட்டல் (Bomb threat to schools) வந்துள்ளது. இதை தொடர்ந்து தான் பள்ளி நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் பள்ளியில் சோதனையை தொடங்கினர். மேலும் மோப்ப நாயும் கொண்டு வரப்பட்டு வெடிகுண்டு இருக்கிறதா என போலீசார் சோதனை செய்து வருகின்றனர். எனினும் இதனை அறியாத மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்ததால் அவர்களின் பாதுகாப்பு கருதி வெளியே அனுப்பினர்.இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து போலீசார் பள்ளி வளாகத்தில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் சென்னை மட்டுமின்றி இதேபோல கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கும் இதேபோல வெடிகுண்டு மிரட்டல் (Intimidation of schools) நேற்று நள்ளிரவில் மின்னஞ்சல் மூலமாக வந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் உடனே போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.
இது (Vedigundu Mirattal to Schools) தொடர்பாக பள்ளி நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் பள்ளிகளில் இரவு முதல் சோதனை பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் தற்போது மாணவ மாணவிகள் நலனை கருத்தில் கொண்டு குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்: ஜெயிலர் படத்திற்கு பிறகு தனது சம்பளத்தை உயர்த்திய நடிகை தமன்னா..! எத்தனை கோடி தெரியுமா? |