Solar System in Tamil: சூரிய குடும்பம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..!
இந்த பதிவில் சூரிய குடும்பம் பற்றி (Solar System in Tamil) பதிவிட்டுள்ளோம். இதனை பயன்படுத்தி சூரிய குடும்பம் என்றால் என்ன? என்பதை பற்றியும் அந்த சூரிய குடும்பத்தில் என்ன கோள்கள் உள்ளன? மற்றும் அதனை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் தெளிவாக தெரிந்து கொள்வோம்.
இந்த சூரிய குடும்பம் எப்படி உருவானது என்பதை விளக்கும் பல கோட்பாடுகளை விஞ்ஞானிகள் வைத்துள்ளனர். இந்த சூரிய குடும்பம் பல லட்சம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானது என்றும், இது சூரிய நெபுலாவில் இருந்து உருவானது என்றும், சூரியன் மையத்தில் உள்ள இயக்க ஆற்றல் மற்றும் அதன் வெப்பத்தின் செறிவில் இருந்து உருவானது என்றும் கூறப்படுகிறது.
இந்த சூரிய குடும்பம் பால் வழியில் உள்ளது. பால் வழி என்பது நம் சூரிய மண்டலத்தை உள்ளடக்கிய ஒரு விண்மீன் பேரடை ஆகும். இந்த பால் விழியில் சூரிய குடும்பம் மட்டுமின்றி 500 பில்லியன் நட்சத்திரங்கள் மற்றும் இன்னும் கூடுதலான நட்சத்திரங்களைக் கொண்டுள்ளது. மேலும் அறியப்பட்ட 700 க்கும் அதிகமான கிரக-நட்சத்திரங்களையும் கொண்டுள்ளது இந்த பால் விழி. இந்த பதிவில் பால் விழியில் உள்ள சூரிய குடும்பம் (Solar System in Tamil Language) பற்றி பதிவிட்டுள்ளோம்.
Table of Contents
சூரிய குடும்பம் என்றால் என்ன? (What is Solar System) – Solar System in Tamil
சூரியனும் பால் விழியில் உள்ள ஒரு நட்சத்திரம் ஆகும். தானாக ஒளிரும் தன்மை கொண்டுள்ளதால் சூரியனும் நட்சத்திரமாக கருதப்படுகிறது. சூரிய குடும்பம் என்பது சூரியனுக்கும் அதனை சுற்றி உள்ள கோள்களுக்கும் இடையே ஈர்ப்பு விசையால் ஏற்பட்டுள்ள அமைப்பு ஆகும். இந்த சூரிய குடும்பத்தில் மொத்தம் 9 கோள்கள் உள்ளன. இவற்றில் 8 பெரிய கோள்கலும், புளூட்டோ உள்ளிட் சிரிய கோளும் உள்ளது. இந்த கோள்கள் அமைத்தும் சூரியனை சுற்றி வருகிறது. இந்த சூரிய குடும்பத்திற்கு (Solar System) சூரிய மண்டலம் என்ற மற்றொரு பெயரும் உண்டு.
சூரிய குடும்ப கோள்கள் (Solar System Planets in Tamil)
புதன் (Mercury)
வெள்ளி (Venus)
பூமி (Earth)
செவ்வாய் (Mars)
வியாழன் (Jupiter)
சனி (Saturn)
யுரேனஸ் (Uranus)
நெப்டியூன் (Neptune)
புளூட்டோ (Pluto)
இவை அனைத்தும் சூரிய குடும்பத்தில் உள்ள (Solar System Planets in Order) கோள்கள் ஆகும். இந்த கோள்களை கிரகங்கள் என்றும் அழைக்களாம். இந்த 9 கோள்களும் வெவ்வேறு நீள்வட்ட பாதையில் சூரியனை சுற்றி வருகின்றன. இவற்றில் சில பெரிய கிரகங்கள் மற்றும் சில சிரிய கிரகம் உள்ளன. இந்த சூரியன் மற்றும் அதனை சுற்றும் ஒன்பது கோள்கள் பற்றி இந்த பதிவில் பார்க்களாம்.
சூரியன் (Sun)
சூரியன் தான் இந்த Solar System -ல் மையமாக உள்ளது. இதனை சுற்றி தான் மற்ற கிரகங்கள் வழம் வருகின்றன. ஞாயிறு, கதிரவன், பகலவன், அனலி, வெய்யோன், ஆதவன், பரிதி, இரவி போன்ற பல தமிழ்ப்பெயர்கள் சூரியனுக்கு உண்டு. அதேபோல் நெருப்பு கோள் மற்றும் விண்மீன் என்று சூரியனை அழைப்பார்கள்.
இந்த சூரியன் மிகவும் வெப்பமான கோள் ஆகும். அதேபோல் சூரியன் துணை இன்றி பூமியில் உந்த உயிரினங்களும் வாழ முடியாது என்பது உண்மை ஆகும். இந்த சூரியனால் தான் பூமியில் அனைத்து உயிர்களுக்கும் வாழ்வாதாரம் உள்ளது. அணுக்கரு இணைவு எதிர்வினை மூலமாக சூரியன் பூமியில் உயிர்கள் இருப்பதற்குத் தேவையான ஆற்றலை வழங்குகிறது. இந்த சூரியன் பூமியில் இருந்து மிக தொலைவில் உள்ளது. அனைத்து கோள்களும் சூரியனை வெவ்வேறு நீள்வட்ட பாதையில் சுற்றி வருகின்றன. இந்த சூரியன் துணையின்றி அனைத்து கோள்களும் பனி சூழ்ந்து உறைந்துவிடும்.
புதன் (Mercury) – Mercury Planet in Tamil
சூரிய குடும்பத்தில் முதல் கிரகமாக உள்ளது புதன் (Mercury) ஆகும். இந்த கிரகம் சூரியனுக்கு மிகவும் அருகில் உள்ள கிரகம் ஆகும். இதன் நிறம் ஸ்லேட் சாம்பல் (Slate Gray) ஆகும். இது சூரியனை மேற்கிலிருந்து கிழக்காக சுற்றி வருகிறது.
சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிக கோள் புதன் ஆகும். சூரியனில் இருந்து சராசரியகா 57.91 மில்லியன் கி.மீ தொலையில் உள்ளது புதன்.
சூரியனுக்கு அருகிள் இருப்பதால் பூமியில் இருந்து புதன் கிரகத்தை பாரக்க முடியாகது. ஆனால் அதிகாலை சூரியன் உதிப்பதற்கு முன்னர் அல்லது மாலை சூரியன் அஸ்தமனத்திற்கு பின் புதன் கிரகத்தை தொடுவனத்தில் பார்க்க முடியும்.
பகல் நேரத்தில் இதன் வெப்பம் 430° செல்சியஸ் வரையும், இரவு நேரத்தில் இதன் வெப்பம் -180° செல்சியஸ் வரையும் இருக்கிறது. இதனால் புதன் கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்திய கூறுகள் தென்படவில்லை.
புதன் ஒரு முறை சூரியனை சூற்றி வர 88 நாட்கள் எடுத்துக்கொள்கிறது.
புதன் கிரகத்தின் ஒரு பகல் என்பது 59 பூமி நாட்கள் ஆகும். ஒரு முழு நாள் என்பது 175.97 பூமி நாட்கள் ஆகும். புதன் சூரியனை முழுதும் சுற்றிவர பூமி நாட்கள் கணக்கு படி 88 நாட்களாகும்.
இதன் புறவெளி மண்டலத்தில் சூரிய வெப்பகாற்று மற்றும் சிறு விண்கற்கள் மோதல் ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள துகள்கள் நிரைந்துள்ளன.
புதன் கிரகத்தின் வெளியில் உயிர் வாயு, சோடியம், நீர்மவாயு, ஹீலியம் மற்றும் பொட்டாசியம் ஆகியன உள்ளன.
வெள்ளி (Venus)
சூரிய குடும்பத்தில் இரண்டாவதாக உள்ள கிரகம் வெள்ளி (Venus) ஆகும். வெள்ளி கிரகம் சூரியனிடமிருந்து 10 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
வெள்ளி சூரியனை கிழக்கிலிருந்து மேற்கா சுற்றி வருகிறது. இது சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்கு 243 நாட்கள் ஆகின்றது.
வெள்ளி கிரகத்தில் அதிகம கார்பன்டைஆக்சைடு வாயு உள்ளது. இது சூரியன் வெப்பத்தை அதிகளவு உள்வாங்கி கொள்ளும். இதன் காரணமாக சூரியனை சுற்றிவரும் கோள்களிலேயே அதிகம் வெப்பமாக உள்ள கோள் இதுதான்.
பூமியிலிருந்து இரவு நேரத்தில் பார்த்தால் இந்த வெள்ளி கிரகம் பளிச்சென்று ஒளி வீசும். அதேபோல் பகல் நேரத்திலும் இந்த Venus தெரியும். இந்த வெள்ளி கோளுக்கு என்று தனியாக எந்த துணைக்கோள் எதுவும் கிடையாது.
வெள்ளியில் வளிமண்டல அழுத்தம் பூமியை விட 92 மடங்கு அதிகம். பூமின் கடல் ஆலத்தில் உள்ள ஆழுத்தத்திற்கு நிகரான அழுத்தம் வெள்ளி கோளின் மேற்பரப்பில் இருக்கும் என கூறப்படுகறிது.
வெள்ளி மேற்பரப்பில் பல பள்ளத்தாக்குகள், மலைகள் மற்றும் அயிரக்கணக்கான எரிமலைகளை கொண்டுள்ளது. Venus நிலப்பரப்பு தூசி நிறைந்ததாக காணப்படுகிறது. இதன் மேற்பரப்பு வெப்ப நிலை ஆனது 471 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
பூமி (Earth) – Earth Planet in Tamil
பூமி சூரிய குடும்பத்தில் உள்ள மூன்றாவது கோள் ஆகும். பூமி சூரியனில் இருந்து சராசரியாக சுமார் 149,600,000 கிமீ தூரத்தில் உள்ளது.
சூரிய மண்டலத்தில் உள்ள மற்ற கோள்களுடன் ஒப்பிடுகையில் விட்டம், நிறை மற்றும் அடர்த்தியின் படி மிகப் பெரிய கோள்களில் புவியும் ஒன்று ஆகும்.
பூமி தன்னை தானே சுற்றிகொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. Earth சூரியனை ஒரு முறை சுற்றுவதற்கு 365.25 நாட்கள் ஆகிறது. இதன் காரணமாகவே 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூமியில் லீப் ஆண்டு கொண்டாடப்படுகிறது.
இந்த பூமியில் தான் பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வாழகின்றனர். அது சுமார் 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக உருவானது என கருதப்படுகிறது. மேலும் 1 பில்லியன் ஆண்டுகளுக்குள் தான் பூமியின் மேற்பரப்பில் உயிரினங்கள் தோன்றின எனவும் கூறப்படுகிறது.
பூமியில் மற்ற கோள்களில் இல்லாத பல சிறப்பம்சங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் ஓசோன் படலம். இது சூரியனின் கதிர்கள் நேரடியாக பூமியில் படுவதை தவிர்க்கிறது.
அதேபோல் பூமியில் ஈர்ப்பு விசை உள்ளது. இதன் காரணமாக மேல்நோக்கி எறியப்படும் பொருட்கள் அனைத்தும் கீழ் நேக்கி திரும்பி வந்தடைபயும்.
இந்த Earth நான்கில் ஒரு பரப்பு நீளத்தையும், மீதி உள்ள இடங்கள் கடல் நீர் சூழ்ந்துள்ளது.
உலகம், நிளக்கேள் என்ற வேறு பெயர்கள் பூமிக்கு உண்டு. பூமி நிலா என்ற துணைக்கோள் ஒன்றினையும் கொண்டுள்ளது. இந்த Moon பூமியை சுற்றி வருகிறது.
செவ்வாய் (Mars) – Sevvai Kol in Tamil
சூரிய குடும்பத்தில் நான்காவதாக உள்ள கிரகம் செவ்வாய் (Mars) ஆகும்.
செவ்வாய் கிரகம் ஒரு முறை சூரியனை சுற்றி வருவதர்கு 687 நாட்கள் ஆகும். இந்த கோள் பூமியின் அளவை விட சிறியது. பூமியல் பாதி அளவில் தான் செய்வாய் இருக்கும். Earth -ன் அடர்த்தியை விட செவ்வாய் கிரகத்தின் அடர்த்தி குறைவு தான்.
செவ்வாய் கிரகத்தில் அதிக அளவு கார்பன் நைட்ரஜன் இருக்கிறது. இதன் காரணமாக பூமியில் மனிதனின் எடை 100 கிலோ இருந்தால் செவ்வாய் கிரகத்தில் 50 கிலோவாக இருக்கும்.
Sevvai Kiragam -ல் அதிகளவு இரும்பு ஆக்சைடு நிறைந்துள்ளது. இதன் காரணமாக வெவ்வாய் கோள் பார்ப்பதற்கு லேசாக சிவப்பு நிறத்தில் இருக்கிறது. எனவே இதற்று சிவப்பு கோள் என்ற பெயரும் உண்டு.
செவ்வாயை ஆராய்ச்சி செய்வதற்காக பூமியில் இருந்து செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டன. அதன் மூலம் செவ்வாய் கோளில் முன்பு நீர் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. காலங்கள் மாற மாற தண்ணீர் வற்றி வெரும் மணலாக மாறி உள்ளது.
செவ்வாய் கோளில் பூமியில் உள்ளது போலவே மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் தண்ணீர் பனி பாலையா உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
செவ்வாய் கோள் மட்டும் தான் சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது. அதனால் ஒரு தடவை சூரியனுக்கு அருகிலும், ஒரு கட்டத்தில் சூரியனுக்கு அதிகமான தூரத்தில் சுற்றி வருகிறது. இதன் காரணமாக செவ்வாய் கிரகம் சூரியனை சுற்றி வர அதிக காலம் எடுத்துக்கொள்கிறது.
வியாழன் (Jupiter)
சூரிய குடும்பத்தில் ஜந்தாவதாக உள்ள கிரகம் வியாழன் (Jupiter) ஆகும். இது சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கோள் ஆகும்.
Jupiter தன்னை தானே சுற்றி வருவதற்கு 10 மணிநேரம் எடுத்துக்கொள்ளும். ஆனால் இது ஒரு முறை சூரியனை சுற்றி வருவதற்கு 12 வருடங்கள் ஆகிறது.
வியாழன் கோளின் வளிமண்டலம் பெரும்பாலும் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்களால் நிறம்பி உள்ளது. இதனால் இது வாயு கோள் என அழைக்கப்படுகிறது.
இந்த வியாழன் கோளை சுற்றி 75 க்கும் மேற்பட்ட துணைக்கோள்கள் இருக்கிறது. அதாவது 75 க்கும் அதிகமான நிலாக்கள் சுற்றி வருகிறன.
சனி (Saturn) – Saturn Planet in Tamil
சூரிய குடும்பத்தில் ஆறாவது உள்ள கிரகம் சனி (Saturn) ஆகும். இது பூமியை விட அகலமான கோள் ஆகும்.
சூரிய குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்துள்ள இரண்டாவது பெரிய கோள் சனி ஆகும். இது மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி சுழல்கிறது.
சனி கோள் பூமியின் அடர்த்தியில் எட்டில் ஒரு பங்கு தான் உள்ளது. இருந்தாலும் இதன் பெரிய அளவினால் பூமியை விட 95 மடங்கு நிறையுடையதாக இருக்கிறது.
Saturn சுற்றி பல தூசுகள் போன்ற பாறைகள் ஏழு வட்டமாக சுற்றி வருகின்றன. இது மற்ற கோள்களில் இருந்து வேறுபடுத்தி காட்டுகிறது.
இது தன்னைத்தானே சுற்றி வருவதற்கு 10 மனி நேரம் தான் ஆகிறது. ஆனால் இது சூரியனை சுற்றி வருவதற்கு மட்டும் 29.5 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது.
சனிக்கு 53 துணைக்கோள்கள் உள்ளன. அவற்றில் 29 நிலாக்கள் சனியை சுற்றி வருகின்றன என கூறப்படுகிறது.
யுரேனஸ் (Uranus) – Uranus Planet in Tamil
சூரிய குடும்பத்தில் ஏழாவது கிரகம் யுரேனஸ் (Uranus) ஆகும். இதன் விட்டத்தின் அடிப்படையில் சூரிய குடும்பத்தின் மூன்றாவது பெரிய கோள் யுரேனஸ் ஆகும்.
இந்த கோள் 1781 ஆம் ஆண்டு வில்லியம் செருசல் என்ற வானியலாளர் ஆல் கண்டறியப்பட்டது. அதற்கு முன்பு வரை சனி கோளுக்கு அடுத்து வேறு எந்த கோள்களும் இல்லை என்று கருதப்பட்டது.
இந்த கோளுக்கு யூதர்களின் கடவுள் பெயர் வைக்கப்பட்டது. யுரேனஸ் கோளை சுற்றி 11 வளையங்கள் உள்ளது.
சூரியனுக்கும் சனி கோளுக்கும் இடைப்பட்ட தூரமும், சனி கோள் மற்றும் யுரேனஸ் கோளுக்கும் இடைபட்ட தூரமும் சமம் ஆகும். இதனால் யுரேனஸ் கோள் சூரிய குடும்ப வளிமண்டலத்தின் அளவை பெரியதாக்கியது என கூறப்படுகிறது.
யுரேனஸ் கோளின் வளிமண்டலத்தில் ஐதரசன், ஈலியம், மீத்தேன் போன்ற வாயுக்கள் உள்ளன. இதன் காரணமாக இது பெரிய வாயு கோள் எனவும் அழைக்கப்படுகிறது.
Uranus தன்னைத்தானே சுற்றி வர 17 மணி நேரம் 14 நிமிடங்கள் தான் ஆகின்றன. இது சூரியனை சுற்றி வருவதற்கு 84 ஆண்டுகள் ஆகின்றன. இதன் படி யுரேனஸ் கோளின் ஒரு ஆண்டு என்பது 43,000 நாட்கள் கொண்டது ஆகும்.
சூரிய குடும்பத்தில் உள்ள மிகவும் குளிர்ச்சியான கோள் Uranus ஆகும். சூரிய குடும்பத்தில் உள்ள மற்ற கோள்கள் குறைவான சுழற்கோணத்தில் குற்றி வருகிறது. இந்த கோள் மட்டும் படுத்துக் கொண்டே சூரியனை சுற்றி சுற்று வருகிறது. இதன் காரணமாக Uranus -ன் ஒரு பகுதி பகலாகவும் மற்றோரு பகுதி இரவாகவும் 42 ஆண்டுகள் வரை தொடர வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
நெப்டியூன் (Neptune) – Neptune Planet in Tamil
சூரிய குடும்பத்தில் எட்டாவது கிரகம் நெப்டியூன் (Neptune) ஆகும். இது ஒரு வெளிப்புற கிரகம் ஆகும்.
பூமியில் இருந்து அதிக தொலைவில் உள்ளதால் இதனை வெறும் கண்களால் பார்க்க முடியாது. பெரிய தொலைநோக்கி மூலம் பார்த்தால் நீல மற்றும் பச்சை நிற வட்டமான பந்து போல் தோன்றும்.
நெப்டியூன் என்பது ரோமானிய கடவுளின் பெயர் ஆகும். சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் நிறை அடிப்படையில் மூன்றாவது மற்றும் விட்டம் அடிப்படையில் நான்காவது பெரிய கோள் ஆகும்.
Neptune பூமியைப்போல 17 மடங்கு நிறை கொண்ட கோள் ஆகும். இது நீல நிற கோள் ஆகும்.
இது ஒரு வாயு கிரகம் ஆகும். இதனால் தான் இது வெளிப்புற கோள் என அழைக்கப்படுகிறது. இதனைச் சுற்றி வாயுவினால் ஆன வளை ஒன்று உள்ளது.
இந்த நெப்டியூன் கோளின் ஒரு நாள் என்பது 16 மணிநேரம் ஆகும். நெட்டியூன் ஒரு முறை சூரியனை சுற்றி வருவதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் ஆனது 165 புவி வருடங்கள் ஆகும்.
புளூட்டோ (Pluto)
புளூட்டோ (Pluto) ஆரம்பத்தில் சூரிய குடும்பத்தின் ஒன்பதாவது கோள் எனக் கருதப்பட்டது. ஆனால் தற்போது இது குறுங்கோள், புளூட்டாய்டு ஆக வகைப்படுத்தப்பட்டது.
புளூட்டோவிற்கு சாரோன் எனும் ஒரு பெரிய நிலா உள்ளது. இதனுடன் மேலும் நான்கு (நிலா) துணைக்கோள்கள் உள்ளன.
1930 ஆம் ஆண்டு கிளைட் டோம்பா என்ற அமெரிக்க வானியல் அறிஞர் இந்த புளூட்டோ கிரகத்தை கண்டுபிடத்தார்.
சூரிய குடும்பத்தின் 8 வது கோளான Neptune -ன் சுற்றுவட்ட பாதையில் புளூட்டோ குறுக்கிடுவதால், இது பூமியின் நிலா போன்ற துணைக்கோள் என அறியப்பட்டது. இதன் காரணமாக கடந்த 2006 ஆம் ஆண்டு சூரியக் குடும்பத்தின் கடைசிக் கோளான Pluto ஒரு கிரகம் அல்ல, அது குறுங்கோள் என விஞ்ஞானிகளால் அறிவிக்கப்பட்டது.
இந்த பதிவின் மூலம் பால் விழி மண்டலத்தில் உள்ள சூரிய குடும்பம் என்றால் என்ன? சூரியன் (Solar Family in Tamil), பூமி உட்பட ஒன்பது கோள்கள் மற்றும் அதன் தனித்துவங்கள் பற்றியும் இந்த பதிவில் பதிவிட்டுள்ளோம்.
புதன், வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் ஆகியவை உள் கிரகங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவை திடமான மேற்பரப்புகளைக் கொண்டுள்ளன மற்றும் பொதுவாக உலோகம் மற்றும் பாறையால் ஆனவை.
2. வெளிப்புற கிரகங்கள் என்றால் என்ன?
வியாழன், சனி, நெப்டியூன் மற்றும் யுரேனஸ் ஆகிய நான்கும் வெளிப்புற கிரகங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவை முக்கியமாக வாயுக்கள் அல்லது பனியைக் கொண்ட கிரகங்கள் ஆகும்.
3. பூமியின் இரட்டை கோள்கள் என அழைக்கப்படுவது எது?
வெள்ளி பூமியின் இரட்டை என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால் பூமி மற்றும் வெள்ளி இரண்டும் கிட்டத்தட்ட ஒரே நிறை மற்றும் அளவைக் கொண்டுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…