Homeசெய்திகள்மகளிர் உரிமைத் தொகை திட்டம்..! பெண்கள் எதிர்பார்த்த பல சலுகைகளுடன் செய்யப்படவுள்ள மாற்றங்கள்..!

மகளிர் உரிமைத் தொகை திட்டம்..! பெண்கள் எதிர்பார்த்த பல சலுகைகளுடன் செய்யப்படவுள்ள மாற்றங்கள்..!

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது பல்வேறு கட்சிகளால் பல தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்பட்டது. அதில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற முக்கிய திட்டம் தான் மகளிர் உரிமைத் தொகை திட்டம். திமுக கட்சி ஆட்சி அமைத்த பின்னர் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) என்னும் திட்டம் மூலம் குடும்ப தலைவிகளுக்கு மாதாமாதம் ரூ. 1000 வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பல இல்லத்தரசிகள் பயணடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தான் தற்போது இந்த திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் தான் இந்த திட்டத்தில் கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் தான் தற்போது இந்த தகவல் வெளியாகியுள்ளது. இதன் படி கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மறுவாழ்வு முகாம் பெண்களுக்கும் விரிவுபடுத்தபட்டுள்ளதாக தகவல் (Magalir Urimai Thogai New Update) வெளியாகியுள்ளது.

அதன் படி இந்த திட்டம் 105 மறுவாழ்வு முகாம்களை சேர்ந்த பெண்களுக்கு இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலமாக சுமார் 19487 குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தபட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் இந்த திட்டம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 1.60 கோடி பேர் இத்திட்டதிற்கு விண்ணப்பித்தனர். அதில் 1.16 கோடி பேருக்கு இப்போது தொகை வழங்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் பணம் கொடுக்கப்படாமல் போன மற்றவர்களுக்கும் இன்னும் 2 முதல் 3 மாதத்தில் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். இப்போது தேர்தல் என்பதால் கடினம் என்றும் விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இந்த மகளிர் உரிமை தொகை திட்டம் இதற்கு முன்னர் முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகளுக்கு வழங்கப்படவில்லை. ஆனால் இந்த முறை அவர்களுக்கும் பணம் கொடுக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் முன்னாள் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகளுக்கும் பணம் கொடுக்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Kalaignar Magalir Urimai Thogai
இதையும் படியுங்கள்: மாம்பழம் வாங்க போறீங்களா? உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை..!
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular