Homeசினிமாசூது கவ்வும் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது..!

சூது கவ்வும் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது..!

கடந்த 2013-ம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான படம் தான் சூது கவ்வும். இந்த படம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தை திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சி.வி.குமார் தயாரித்திருந்தார்.

சூது கவ்வும் படத்தின் முதல் பாகம் வெறும் 2 கோடி பொருட்செலவில் (Soodhu Kavvum Cast) உருவாக்கப்பட்டது. ஆனால் மொத்தம் 35 கோடி வசூல் செய்தது. இப்படம் ஒரு டார்க் காமெடி க்ரைம் திரைப்படம் எடுக்கப்பட்டு இருந்தது. இந்தப் படத்தில் பாபி சிம்ஹா, சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், ரமேஷ் திலக், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், ராதா ரவி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் இந்த படம் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயம் வெளியாகும் என்ற இரண்டு வருடங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் சி.வி.குமார் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தான் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.

இதன் படி இந்த சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகத்தில் (Soodhu Kavvum 2 Movie) விஜய் சேதுபதிக்கு பதிலாக மிர்ச்சி சிவா நடிக்கிறார் என்று தகவல் வெளியானது. மேலும் இதுதவிர கருணாகரன், ரமேஷ் திலக், ராதா ரவி மற்றும் சிலர் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தினை இயக்குனர் (soodhu kavvum 2 Director) அர்ஜுன் தான் இயக்குகிறார். மேலும் இந்த படத்திற்கு கார்த்திக் கே.தில்லை ஒளிப்பதிவு செய்கிறார்.

Soodhu Kavvum 2 First Look Poster

இந்த நிலையில் தான் தற்போது இந்த சூது கவ்வும் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் (Soodhu Kavvum 2 Movie First Look Poster) வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரானது மிகவும் வித்தியாசமான முறையில் உருவாகியுள்ளது. இதன் காரணமாக இந்த போஸ்டர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த போஸ்டர் படம் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தயுள்ளது.

இதையும் படியுங்கள்: ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்படும்..! அறிவிப்பை வெளியிட்டது ரிசர்வ் வங்கி..!
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular