தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவர் தான் விஜய் சேதுபதி. இவரின் நடிப்பை பிடிக்காத மக்களே இருக்க முடியாது என்று தான் கூறவேண்டும். இவர் ஒரு கதாபாத்திரத்தைக் கொடுத்தால் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடும் நடிகர்களில் இவரும் ஒருவர். மேலும் இவருக்கு கதாநாயகன் வில்லன் என்று அனைத்து கதாபாத்திரங்களும் பொருந்தும்.
இவர் தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இந்த வரிசையில் முக்கியமான ஒரு படம் தான் சூது கவ்வும். இந்த படம் கடந்த 2013-ம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். மேலும் இந்த படத்தினை இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கி இருந்தார்.
இப்படத்தில் கதாநாயகனாக விஜய் சேதுபதி நடித்து இருந்தார். மேலும் சஞ்சிதா ஷெட்டி, பாபி சிம்ஹா, அசோக்செல்வன், கருணாகரன், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் நகைச்சுவை கலந்த படமாக உருவாக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
சூது கவ்வும் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் அடுத்த பாகம் உருவாகி வருகிறது. ‘சூது கவ்வும் 2’ படத்தினை இயக்குனர் எம்.எஸ்.அர்ஜுன் இயக்குகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக (Soodhu Kavvum 2 Movie Hero) விஜய் சேதுபதிக்கு பதிலாக மிர்ச்சி சிவா நடிக்கிறார். மேலும் இப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் கருணாகரன் நடிக்கிறார். இப்படத்தினை திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் கார்த்திக் கே தில்லை ஆவார்.
இந்த நிலையில் தான் தற்போது இப்படம் பற்றிய முக்கிய அறிவிப்பை (Soodhu Kavvum 2 Update) படக்குழு வெளியிட்டுள்ளது. விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் (Soodhu Kavvum 2 First Look Poster) வரும் மார்ச் 22-ம் தேதி வெளியாகவுள்ளது என்று படக்குழு அறிவித்துள்ளது. முதல் பாகத்தின் வெற்றியின் காரணமாக இந்த படம் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்: புதுப்பேட்டை 2: படப்பிடிப்பு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியானது..! |