இந்த வாரம் வரும் வெள்ளிக்கிழமை அன்று கிறிஸ்தவர்கள் கொண்டாடும் புனித வெள்ளி மற்றும் சனி, ஞாயிரு வார இருதி நாட்கள் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் இருந்து மற்ற இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் (Special Buses for Good Friday) இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் இந்த மூன்று விடுமுறை நாட்களுக்காக கூடுதலாக சிறப்பு பேருந்துகளை (Special Buses) இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வரும் வியாழன் கிழமை (28.03.2024) அன்று சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 505 பேருந்துகள், வெள்ளிக்கிழமை (29.03.2024) அன்று 300 பேருந்துகள் மற்றும் சனிகிழமை (30.03.2024) அன்று 345 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
அதேபோல் சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 28, 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் 120 பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை திட்டமறத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு பேருந்துகள் மேற்கூறிய இடங்களிலிருந்தும், மேலும் பெங்களூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் (Special Bus) இயக்க தமிழக போக்குவரத்து துறை திட்டமிடப்பட்டுள்ளது.
விடுமுறைகள் முடிந்த பிறகு ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் போன்ற நகரங்களுக்கு திரும்ப பயணிகளின் வசதிகாக தேவைக்கு ஏற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.