Homeசெய்திகள்மாணவர்களுக்கு குட் நியூஸ்..!கல்விக்கடன் பற்றிய முக்கிய தகவல்..!

மாணவர்களுக்கு குட் நியூஸ்..!கல்விக்கடன் பற்றிய முக்கிய தகவல்..!

இந்தியாவில் எப்போதும் கல்விக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் என்பது அதிகமாக தான் உள்ளது. அதிலும் தமிழ்நாட்டில் எப்போதும் ஒரு படி மேல் தான் உள்ளது. கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு புதிய புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகள் என அனைத்தையும் அறிவித்து தான் வருகிறது.

மேலும் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்கு முன்பு மட்டுமின்றி அதன் பிறகும் உதவிதொகைப் போன்ற பல சலுகைகளை அரசு அறிவித்த வண்ணம் தான் உள்ளது. மேலும் பல மாணவ மாணவிகள் குடும்ப கஷ்டம் காரணமாக தங்கள் படிப்பை தொடர முடியாமல் இருப்பர்.

இது போன்ற குடும்பத்தின் வறுமை காரணமாக மாணவ மாணவிகள் தங்கள் கல்வியை விட்டுவிட கூடாது என்பதன் காரணமாக தொடங்கப்பட்ட திட்டம் தான் இந்த கல்வி கடன் (Education loan) வழங்கும் திட்டம் இந்த திட்டத்தின் மூலம் வருடாவருடம் பல மாணவ மாணவிகள் பயன்பெற்று தான் வருகின்றனர்.

இந்நிலையில் தான் தற்போது இந்த வருடத்திற்கான கல்வி கடன் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான அனைத்து மாவட்டங்களிலும் நாளை முகாம்கள் (Education Loan Camp) நடத்தப்படவுள்ளது. இந்த முகாம் அனைத்து மாவட்டங்களில் உள்ள ஆட்சியர் அலுவலகங்களில் நடைபெறவுள்ளது. எனவே கல்விக்கடன் தேவைப்படும் மாணவ மாணவிகள் இந்த முகாமில் (Kalvi Kadan Mugam) கலந்துக்கொண்டு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தேவைப்படும் ஆவணங்கள்

  • ஆதார் அட்டை
  • சாதி சான்று
  • வருமான சான்றிதழ்
  • மதிப்பெண் சான்றிதழ்
  • கல்லூரி கட்டண விவரம்
  • கலந்தாய்வு கடிதம்
  • வங்கி பாஸ்புக்

இவை அனைத்தும் தேவைப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவ மாணவிகள் சென்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Kalvi Kadan Mugam
இதையும் படியுங்கள்: தல படத்தில் சிவகார்த்திகேயன்..! வைரலாகும் புகைப்படம்..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular