Homeசெய்திகள்ஓட்டு போட ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் ரயில்கள் இயக்கம்..!

ஓட்டு போட ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் ரயில்கள் இயக்கம்..!

Election Special Train 2024: நாடு முழுவதும் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் தொடர்பான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வாக்கு செலுத்த சொந்த ஊர் செல்பவர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட (Special Train for Election) உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் தமிழ்நாடு உட்பட மொத்தம் 21 மாநிலங்களை சேர்ந்த 102 தொகுதிகளுலும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நாளை மாலை 6 மணியுடன் முடிவுடைய உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரபிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்த மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிப்பார்கள். அவர்களின் பயணத்திற்கு உதவும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் (Election Special Train 2024 in tamill) என்று தமிழக அரசு சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வரும் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி மக்கள் சொந்த ஊர் சென்று வாக்குப்பதிவு செய்வதற்கு வசதியாக இருக்கும் வகையில் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. சென்னை தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு வரும் ஏப்ரல் 19, 21 ஆம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Special Train for Parliament Election

சென்னை தாமபரத்தில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்படும் ரயில் கன்னியாகுமரியை மாநாள் காலை 4.40 மணிக்கு சென்றடையும். மேலும் எழும்பூர் – கோவை மற்றும் கோவை – எழும்பூர் ஆகிய வழிதடங்களிலும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ஓட்டு போட ஊருக்கு போறீங்களா? தேர்தல் ஸ்பெஷல் பேருந்துகள் இயக்கம்..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular