பண்டிகை காலங்களில் மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுவது என்பது வழக்காமான நிகழ்வு தான். அதேபோல தான் வரும் 25-ம் தேதி ஹோலிப்பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இந்த பண்டிகையின் போது நிச்சயம் மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வர் இதன் காரணமாக சிறப்பு ரயில்கள் (Special Train For Holi 2024) அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை இப்பதிவில் பார்க்கலாம்.
ஹோலி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் (Special Trains in TamilNadu) இயக்கப்படவுள்ளது. மேலும் இது தொடர்பாக அறிவிப்பையும் (Sirappu Trains) தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் சிறப்பு ரயில்கள் பற்றிய தகவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி
தாம்பரம்-நாகர்கோவில் செல்லும் ரயில் 25-ந்தேதியும், நாகர்கோவில்-தாம்பரம் வரை செல்லும் ரயில் 24-ந்தேதி மற்றும் 31-ந்தேதியும் இயக்கப்படுகிறது. மேலும் நாகர்கோவில்-சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் செல்லும் ரயில் 24-ம் தேதியும், சென்னை சென்ட்ரல்-நாகர்கோவில் 25-ந்தேதியும் மற்றும் சென்னை எழும்பூர்-நாகர்கோவில் 28-ந்தேதியும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்படடுள்ளது.
தேதி | வண்டி எண் | இடம் |
25.03.2024 | 06011 | தாம்பரம்-நாகர்கோவில் |
24.03.2024 | 06012 | நாகர்கோவில்-தாம்பரம் |
31.03.2024 | 06012 | நாகர்கோவில்-தாம்பரம் |
24.03.2024 | 06019 | நாகர்கோவில்-சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் |
25.03.2024 | 06020 | சென்னை சென்டிரல்-நாகர்கோவில் |
28.03.2024 | 06067 | சென்னை எழும்பூர்-நாகர்கோவில் |
மேலும் முக்கிய குறிப்பாக வண்டி எண் 16382 கன்னியாகுமரி முதல் புனே எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை (23.03.2024) 35 நிமிடம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை வண்டி எண் 06777 எர்ணாகுளம் -கொல்லம் எக்ஸ்பிரஸ் மற்றும் வண்டி எண் 06778 கொல்லம்-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்படும்..! அறிவிப்பை வெளியிட்டது ரிசர்வ் வங்கி..! |