இந்த காலத்தில் எவ்வளவு தான் படித்தாலும் ஒரு நல்ல வேலை கிடைப்பது என்பது அவ்வளவு சுலபமாக இல்லை. அதிலும் மத்திய அரசு வேலைகள் என்றால் செல்லவே தேவையில்லை. இந்த நிலையில் தான் தற்போது பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அரசு வேலைகளில் சேர வேண்டும் என்பதற்காக பலரும் பல வருடங்களாக முயற்சி செய்து வருகின்றனர்.
இதுபோல் மத்திய அரசு வேலையில் சேரவேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்காக தான் தற்போது SSC Recruitment 2024 குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் LDS, DEO மற்றும் JSA பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித் தகுதி விவரங்கள், தேவையான வயது வரம்பு, தேர்வு முறை, கட்டண விவரங்கள் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது போன்ற பிற விவரங்கள் இப்பதிவில் பார்க்கலாம்.
பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசின் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Data Entry Operator உட்பட 4 வகையான பிரிவுகளின் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான SSC Recruitment 2024 Official Notification அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த பணியாளர் தேர்வாணைய ஆட்சேர்ப்பு 2024 நடவடிக்கையின் படி காலியாக உள்ள பல்வேறு காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
இந்த SSC Jobs Notification அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ள பதவிகளுக்கான கல்வித்தகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி நான்கு விதமான பதவிகள் நிரப்பபடவுள்ளது. இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 12-ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க எந்த வித முன் அனுபவமும் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Staff Selection Commission Recruitment 2024-ன் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். அதாவது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளமான www.ssc.gov.in-ல் கொடுக்கப்பட்டுள்ள ssc.gov.in/home– என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த SSC CHSL Jobs பணிகளுக்கு முதலில் Tier-I தேர்வு நடைபெறும். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு Tier-II தேர்வு நடைபெறும். பி என்று இரண்டுமூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். அதன் பின்னர் அவர்களுக்கு Skill Test மற்றும் Typing Test நடைபெறும். அதன் பிறகு ஆவணங்கள் சரிப்பார்ப்பு நடைபெற்று அதன் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் உள்ளது. அதன் படி ST/SC/ESM/PWD பிரிவை சேர்ந்தவர்களுக்கும, பெண்களுக்கும் விண்ணப்ப கட்டணம் இல்லை. இவர்கள் தவிர மற்று பிரிவினருக்கு தேர்வு கட்டணம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SSC CHSL Recruitment 2024 மூலம் நிரப்பபடவுள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 07.05.2024 வரை (SSC CHSL Recruitment Vacancy Last Date) விண்ணப்பிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. Staff Selection Commission-ல் இருந்து வெளியாகியுள்ள இந்த பணிகளுக்கு மொத்தமாக உள்ள காலிப்பணியிடங்கள் (SSC CHSL Job Vacancy) 3712 பணியிடங்கள் ஆகும்.
இந்த SSC CHSL Jobs பதவிகளுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு குறித்த விவரங்கள் அதிகாரப்புர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன் படி இந்த அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள Lower Division Clerk உள்ளிட்ட நான்கு விதமான பதவிகள் நிரப்பபடவுள்ளன. இந்த பணிகளுக்கான சம்பளம் ஒவ்வொரு பணிக்கும் வேறுபடுகிறது. மேலும் இதற்கான சம்பளம் ரூபாய் 19,900 முதல் 92,300 வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த SSC CHSL Velaivaippu 2024 குறித்த முழு தகவல்களுக்கு ஆதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக பார்க்கவும்.
SSC CHSL Recruitment 2024: சபாஷ் நீங்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த மத்திய அரசு வேலை..! 3712 காலியிடங்கள் அறிவிப்பு..! மிஸ் பண்ணிடாதீங்க..!
பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து SSC CHSL Recruitment 2024 குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Salary: 19900–92300
Salary Currency: INR
Payroll: MONTH
Date Posted: 2024-04-09
Posting Expiry Date: 2024-05-07
Employment Type : FULL_TIME
Hiring Organization : Staff Selection Commission
Organization URL: www.ssc.gov.in
Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg
Location: PostalAddress, Block No. 12, CGO Complex, Lodhi Road, New Delhi, 110003, India
Education Required:
- High School
இதையும் படியுங்கள்: ராமநாதபுரத்தில் மாதம் ரூ.75,000/- சம்பளத்துக்கு நர்சிங் உதவியாளர் வேலைக்கு ஆட்கள் தேவையென்று ECHS நிறுவனம் அறிவித்துள்ளது… |