பணியாளர் தேர்வாணையம் இன்ஜினியரிங் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. SSC Recruitment 2024 அறிவிப்பின் படி ஜூனியர் இன்ஜினியர்ஸ் பணிகளுக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கல்வி தகுதி மற்றும் வயது வரம்பு உள்ளிட்ட தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம்.
பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்படவுள்ள 968 ஜூனியர் இன்ஜினியர்ஸ் பதவிகளுக்கான SSC Recruitment 2024 Official Notification அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. SSC Exams மூலம் நிரப்பப்படும் ஜூனியர் இன்ஜினியர்ஸ் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதியானது அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் சிவில், எலக்ட்ரிக்கல் அல்லது மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ஆகிய பிரிவுகளில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியாளர் தேர்வாணையம் ஆட்சேர்ப்பு 2024-ன் படி நிரப்படவுள்ள இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கவேண்டும்.
SSC ஆட்சேர்ப்பு நடவடிக்கை மூலம் நிரப்பப்பட உள்ள இந்த பணியிடங்களுக்கு முதலில் ஆன்லைன் தேர்வு நடைபெறும். அதன் பிறகு Group Discussion பின்னர் Preliminary Screening அதன் பின் சார்ட்லிஸ்ட் செய்யப்பட்டவர்கள் பணியமர்த்தப்படுவர். இந்த SSC Junior Engineer பதவிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் உள்ளது. அதன்படி SC/ST மற்றும் பெண்கள், முன்னாள் ராணுவத்தினர் அகிய பிரிவை சேர்ந்தவர்களுக்கு எந்த வித கட்டணமும் இல்லை இவர்கள் தவிர்த்து மற்ற பிரிவினருக்கு விண்ணப்பகட்டணமாக ரூபாய் 100 வசூலிக்கப்படுகிறது.
இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு 28.03.2024 முதல் 18.04.2024 வரை விண்ணப்பிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. SSC Junior Engineer பதவிகளுக்கு மொத்தமாக உள்ள காலிப்பணியிடங்கள் (SSC Junior Engineer Job Vacancy) 968 பணியிடங்கள் ஆகும். இதற்கான சம்பளம் 35,400 முதல் 1,12,400 வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த SSC Junior Engineer Recruitment 2024 குறித்த முழு தகவல்களுக்கு ஆதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக பார்க்கவும்.
[rank_math_rich_snippet id=”s-2da6aff4-92c5-4dce-bb86-ea0b79c193a5″]