Homeசெய்திகள்முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஒரே தொகுதியில் பிரசாரம்... எந்த ஊர் தெரியுமா?

முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஒரே தொகுதியில் பிரசாரம்… எந்த ஊர் தெரியுமா?

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் அவர்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். தமிழக முதல்வர் மற்றும் அனைத்து கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறானர். இந்த நிலையில் தமிழக முதல்வர் மற்றும் தமிழக எதிர் கட்சி தலைவரும் இன்று ஒரே இடத்தில் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை (Nadalumandra Therthal 2024) பொறுத்தவரை தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலுக்காக இந்த கட்சிகள் அவர்கள் வேட்பாளர்களை அறிவித்து மக்களிடையே வாக்கு சேகரிக்கும் முனைப்பில் தீவிர பிசச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகிறது.

தூத்துக்குடியில் நாடாளுமன்ற தேர்தலுக்காக தி.மு.க. (DMK) வேட்பாளராக கனிமொழி எம்.பி. போட்டியிடுகிறார். கடந்த சில நாட்களாக தூத்துக்குடியில் கனிமொழி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கனிமொழி மற்றும் ராமநாதபுரம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு எட்டயபுரம் அருகே உள்ள சிந்தலக்கரையில் (Mudhalvar Pracharam) பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

Parliament Election 2024

அதேபோன்று தூத்துக்குடி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக ஆர்.சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே தமிழக எதிர்கட்சி தலைவரும் அ.தி.மு.க கட்சியின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 4 மணிக்கு (Ethirkatchi Thalaivar pracharam) பிரச்சாரம் செய்ய உள்ளார்.

தூத்துக்குடி தொகுதியில் ஒரே நாளில் தமிழகத்தின் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவரும் அவர்கள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்: திமுக திட்டவட்டம்..! அதிர்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular