வளர்ந்து வரும் நடிகரான கவின் தற்போது நடிக்கும் ஸ்டார் (Star Movie Trailer Release) படத்தின் டிரைலர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்ததுள்ளது. இந்த ஸ்டார் படத்தின் டிரைலர் மற்றும் திரைக்கு வரும் தேதியும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் மக்கள் மத்தில் பிரபலமானவர் நடிகர் கவின். சரவணன் மீனாட்சி சீரியலை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கினார் நடிகர் கவின்.
பிக்பாஸ் -க்கு பிறகு பல படங்களில் கதாநாயகனாக நடித்தார் கவின். ஆனால் கடந்த ஆண்டு வெளியான டாடா படத்தின் மூலம் மக்கள் மத்தியிலும் சினமா துறையிலும் அதிக கவனம் பெற்று பிரவலமானார் கவின். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது கவின் நடன இயக்குநர் சதீஷ் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
அந்த படத்தை தொடர்ந்து (Kavin Next Movie) பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குனர் இளன் அடுத்ததாக இயக்கும் படம் ஸ்டார். இந்த படத்தில் கதாநாயகனாக கவின் நடித்து வருகிறார். இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக அதிதி எஸ். போஹன்கர் நடிக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்த ஸ்டார் படத்தின் மேக்கிங் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த ஸ்டார் படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. இந்த திரைப்படம் வரும் மே 10 ஆம் தேதி (Star Movie Release Date) திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
This Statement is just merely a dialogue but a Statement that every Middle Class Son/Daughter listen when they say they want to enter Cinema Industry 💔#Star #StarTrailer #Kavin pic.twitter.com/E4crL0TVeC
— Vakeel Veersamy (@abhiiiiiii____) April 27, 2024