தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் (ஏப்ரல் 24) கோடை விடுமுறையை அறிவித்து உத்தரவிட்டுள்ளது தமிழக பள்ளிக் கல்வித்துறை. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ் 2, மாணவ, மாணவிகளுக்கு மார்ச் 1 ஆம் தேதி முதல் ஏப்ரல் 8-ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெற்று முடிவடைந்து.
மேலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு இறுதித் தேர்வு ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை நடைபெற்றது. பிறகு ஏப்ரல் 13-ம் தேதியிலிருந்து விடுமுறை (summer holidays for tn schools 2024) அறிவிக்கப்பட்ட இருந்த நிலையில், 4-ம் வகுப்பு மற்றும் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 10, 12 தினங்களில் நடைபெற இருந்த தேர்வுகள் ரமலான் பண்டிகை காரணமாக, கடந்த ஏப்ரல் 22, 23 ஆம் தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டன.
எனவே அந்த தேர்வுகள் கடந்த செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், மாணவர்களுக்கு நாளை ஏப்ரல் 24 தேதி வரை கோடை விடுமுறை (kodai vidumurai 2024 date) அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பள்ளிகள் திறக்க தாமதமாகலாம் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. காரணம் தமிழகத்தில் இந்த வருடம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தற்போதே பொதுமக்கள் மிகுந்த சிரமத்தற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளி மாணவர்கள் தேர்வுக்கு செல்வதற்கு கூட மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். இதனால் இதுபோன்றே வெயிலின் தாக்கம் அதிகரித்தால் பள்ளிகள் திறப்பது தள்ளிப்போகலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் வரும் கல்வியாண்டியிலும் (2024-2025) பள்ளிகள் திறக்க தாமதமாகலாம் என கூறப்படுகிறது. மேலும் ஜூன் 4-ஆம் தேதி மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதால், அதன்பிறகு பள்ளிகள் திறப்பு (tn schools reopen in 2024) இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
மேலும் தமிழக பள்ளிக் கல்வித் தறை வெளியிட்ட அறிக்கையில் கோடை விடுமுறை நாட்களில் மாணவர்கள்கள் நலன் கருதி அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.