தமிழகத்தில் நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் அதிகளவு வெப்பம் நிலவுவதால் கடந்த கல்வியாண்டை போன்று, இந்த கல்வியாண்டிலும் பள்ளிகளின் திறப்பு தள்ளிப்போகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாக பொதுமக்கள் தங்களை வெயிலில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக குளிர்ச்சியான பழங்கள், திரவ ஆகாரங்களை எடுத்து வருகின்றன. இருந்தபோதிலும் இந்த வெயிலின் தாக்கத்தை மக்களால் சமாளிக்க முடியவில்லை என்றே தான் கூறவேண்டும்.
இந்நிலையில் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் போன்றவர்கள் இந்த வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் தெரிவித்த தகவலின்படி தமிழகத்தில் வெப்பநிலை அதிகரித்து வருவதால் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மஞ்சள் அலர்ட் (Yellow Alert in Tamil Nadu 2024) கொடுக்கப்பட்டிருந்தது.
மேலும் கோடை வெப்பத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாத்துக்கொள்வதற்காக, தமிழகத்தின் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி கோடை காலங்களில் ஏற்படும் உடல்நலப் பிரச்சனையை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள பதிவில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. வானிலை ஆய்வு மையமும் வெப்ப அலை வீசக் கூடும் (Veppa Alai in Tamil nadu 2024) என அறிவித்துள்ளது. எனவே இந்த காலக்கட்டத்தில் மக்களின் தாகத்தை தீர்க்க, நீர் – மோர் பந்தல்களை அமைக்க வேண்டும் என்றும் என்று தெரிவித்தனர். மேலும் கால்நடைகளும் நீர் பருகுவதற்கான வசதிகளை (udhayanidhi stalin kodai veyil munnacharikai nadavadikai) ஏற்படுத்தி கொடுப்போம் என்று தொண்டர்களுக்கு தெரிவித்துள்ளார்.