இந்த 2023-2024 கல்வி ஆண்டு முடிவடைய இன்னும் சில வாரங்கள் தான் உள்ளது. பொதுத்தேர்வுகளும் தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும 26-ம் தேதி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வுகள் தொடங்கவுள்ளது. இந்த தேர்வுகள் அனைத்தும் முடிவடையும் போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை (Summer Holidays for Schools) விடப்படும். இந்த விடுமுறைகள் முடிந்த பிறகு அடுத்த கல்வியாண்டு தொடங்கும்.
12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 25-ம் தேதி தேர்வுகள் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் தான் இந்த பொதுத்தேர்வுகள் முடிந்த பிறகு மற்ற வகுப்பு மாணவர்களுக்கு அதாவது 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முலாண்டு தேர்வுகள் நடைபெறும் இந்த தேர்வுகள் முடிந்த பிறகு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படும். இதுபோல தான் இந்த வருடத்திற்கான கோடை விடுமுறை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த அறிவிப்பினை தமிழ்நாடு அரவு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளின் அனைத்து வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வுகள் முடிந்த பிறகு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் படி இந்த கல்வியாண்டின் கோடை விடுமுறை (Summer Vacation for Schools) வரும் ஏப்ரல் மாதம் 13-ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் விடுமுறையானது ஜூன் மாதம் முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. தற்போது இந்த கோடை விடுமுறை (Summer Leave) பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளதால் பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதையும் படியுங்கள்: உடல் சூட்டை தணிக்கும் சுவையான நுங்கு இளநீர் சர்பத் செய்வது எப்படி? |