Homeசெய்திகள்Electronic Voting Machine: மின்னணு வாக்கு இயந்திரத்தில் முறைகேடு... உச்ச நீதிமன்றத்தில் வாதம்..!

Electronic Voting Machine: மின்னணு வாக்கு இயந்திரத்தில் முறைகேடு… உச்ச நீதிமன்றத்தில் வாதம்..!

தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும் மின்னணு வாக்கு இயந்திரம் (Electronic Voting Machine) முறைகேடு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் மின்னணு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்ற வாதத்தை முன்வைத்துள்ளது.

மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜின் 01 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் அவர்கள் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் நாளை மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்வு பெற உள்ளது. அதன் பிறகு வரும் வெள்ளிக்கிழமை தேர்தல் நடைபெறவுள்ளது.

தேர்தல் என்றாலே அதில் முக்கிய பங்கு வகிப்பது வாக்கு இயந்திரம் (Vakku Enthiram) தான். இந்த மின்னணு வாக்கு இயந்திரத்தில் தற்போதெல்லாம் முறைகேடுகள் நடைபெறுவதாக அனைத்து கட்சிகளும் தெரிவிக்கின்றன. வாக்கு இயந்திரத்தல் (Election Vote Mission) எதிர்கட்சிகளுக்கு செலுத்தும் வாக்குகள் அனைத்தும் ஆளும் கட்சிகளுக்கு வாக்காக பதிவாகிறது என அனைத்து எதிர்கட்சிகளும் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு பதிலாக ஓட்டு சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர அனைத்து கட்சிகளும் தெரிவிக்கன்றன. இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்குகள் பதிவு (Vakku Enthiram Muraikadu) செய்யப்பட்டுள்ளன. அதன் படி வாக்குப்பதிவு ஒப்புகைச்சீட்டுகளை 100% எண்ணக் கோரிய வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் அவரின் வாதங்களை முன்வைத்தார்.

Vote Mission

இவிஎம் (EVM), விவிபாட் (VVPAT) ஆகிய இரண்டு இயந்திரங்களிலும் இரண்டு விதமான சிப்கள் பொருத்தப்பட்டுள்ளதால் முறைகேடுகள் செய்ய முடியும். மேலும் இவிஎம் இயந்திரத்தின் முதல் மெமரி சிப், சின்னங்கள் பதிவு செய்யும் போது அதில் புரோகிராம் செய்யப்படுகின்றன என்றும் உச்சநீதிமன்றத்தில் (Supreme Court) மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தெரிவித்தார்.

மேலும் படிக்க: இரண்டு நாளில் பிரச்சாரம் ஓய்வு… முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular