Homeசெய்திகள்இந்தியாநீதிபதி பணிக்கு நியமனம் பெற 3 ஆண்டு வழக்கறிஞர் அனுபவம் கட்டாயம் – சுப்ரீம் கோர்ட்...

நீதிபதி பணிக்கு நியமனம் பெற 3 ஆண்டு வழக்கறிஞர் அனுபவம் கட்டாயம் – சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு!

நீதிபதியாக நியமிக்கப்பட விரும்பும் எவரும், குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றியிருக்க வேண்டும் என இந்திய உயர்நீதிமன்றம் (Supreme Court) இன்று ஒரு முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளது.

இந்த தீர்ப்பை, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதிகள் ஏ.ஜி. மாசிஹ், மற்றும் கே. வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கியுள்ளது.

முக்கிய அம்சங்கள்:

  • நீதிபதியாக நியமிக்கப்பட மூன்றாண்டு வழக்கறிஞர் அனுபவம் கட்டாயம்
  • இத்தீர்ப்பு, தற்போதுள்ள பணியமர்த்தல்களுக்கு பொருந்தாது
  • அடுத்த சுற்று நியமனங்களிலிருந்து இது அமலுக்கு வரும்
  • சிவில் நீதிபதி தேர்வுக்கான விதிகளில் மாநில அரசுகள் மாற்றம் செய்ய வேண்டும்
  • பயிற்சி பெற்றிருப்பதை 10 ஆண்டுகள் அனுபவம் உள்ள வழக்கறிஞர் ஒருவர் சான்றளிக்க வேண்டும்
  • சட்ட எழுத்தராக இருந்த பணி அனுபவமும் கணக்கில் எடுக்கப்படும்

இந்த தீர்ப்பின் பின்னணியாக, அனுபவமில்லாத புதிய சட்ட பட்டதாரிகள் நீதிபதிகளாக நியமிக்கப்படும்போது பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உருவாகின்றன என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி கவாய்,

ஒரு நாளும் வழக்கறிஞராகப் பணியாற்றாதவர்களை நீதிபதியாக நியமிக்கும் நடைமுறை கடந்த 20 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இது வெற்றிகரமான அனுபவமாக அமையவில்லை, எனக் கடுமையாக விமர்சித்தார்.

நீதிபதியாக நியமிக்கப்படுபவர்கள், தங்கள் முதல் நாளிலேயே வாழ்க்கை, சுதந்திரம், சொத்து உரிமைகள் போன்ற விசயங்களை தீர்மானிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடுகிறது. இதற்குத் தேவையான அனுபவம் சட்ட புத்தகங்களில் கிடைக்காது; அது நேரடி நடைமுறை வழக்கறிஞர் அனுபவத்தில்தான் பிறக்கிறது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

Most Popular