சினிமா உலகில் பல ஜோடிகள் இருந்தாலும் பலரது விருப்பமான ஜோடியாக இருப்பது சூர்யா மற்றும் ஜோதிகா தான். இவர்கள் ரீல் ஜோடியாக இருந்து ரியல் ஜோடியாக மாறியவர்கள். இவர்கள் இருவரும் கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ம் தேதி திருமணம் செய்துக்கொண்டனர். திருமணத்திற்கு பிறகு சில வருடம் படங்களில் நடிக்காமல் தனது குடும்பம் மற்றும் குழந்தைகளை பார்த்துக்கொள்வது என்று இருந்தால் ஜோதிகா (Actress Jyothika).
பல வருடங்கள் கழித்து கடந்த 2015-ம் ஆண்டு 36 வயதினிலே படம் மூலம் ஜோதிகா ரீஎன்டிரி கொடுத்தார். அதன் பிறகு சிறப்பான கதைகளை தேர்வு செய்து ஜோதிகா நடித்து வருகிறார். இந்நிலையில் தான் தற்போது சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யா (Actor Surya) மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட 6 படங்களில் நடித்துள்ளனர். இவை அனைத்தும் அவர்களுக்கு வெற்றிப் படங்களாக அமைந்தது. மேலும் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படங்கள் மக்களிடைய நல்ல வரவேற்பை பெற்றது.
கடைசியாக சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து நடித்து வெளியான படம் தான் சில்லுனு ஒரு காதல். இந்த படத்திற்கு இன்றளவும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் 18 வருடங்களுக்குப் பிறகு சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து (Surya Jyotika New Moviev) நடிக்கவுள்ளனர்.
அந்த படத்தை ஹலிதா சமீம் மற்றும் அஞ்சலி மேனன் ஆகியோர் இயக்க உள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து இதற்கு முன்னர் பூவரசம் பீப்பீ, சில்லுக் கருப்பட்டி, ஏலே, புத்தம் புது காலை, விடியாதா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளனர். இத்தனை வருடத்திற்கு பிறகு சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து நடிக்க உள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இதையும் படியுங்கள்: இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியானது..! |