வருடா வருடம் வானத்தில் நிகழும் அழகான மற்றும் ஆச்சரியமான நிகழ்வுகளில் ஒன்று தான் சூரிய கிரகணம். இந்த வருடத்திற்கான சூரிய கிரகணமானது ஏப்ரல் மாதத்தில் நடைபெறுகிறது. மேலும் இந்த கிரகணத்தின் போது சந்திரன் சூரியனை முழுமையாக மறைக்கும். இந்த நிகழ்வைத் தான் நாம் சூரிய கிரகணம் என்கிறோம். இந்நிலையில் இந்த சூரிய கிரகணம் என்றால் என்ன, இந்த வருடத்திற்கான சூரிய கிரகணம் எந்த நாளில் வருகிறது. மேலும் இது குறித்த பல தகவல்களை இப்பதிவில் (Surya Grahanam in Tamil) நாம் பார்க்கவுள்ளோம்.
Table of Contents
சூரிய கிரகணம் (Surya Grahanam)
சூரிய கிரகணம் என்பது பொதுவாக பூமி, சந்திரன், சூரியன் ஆகிய மூன்று கோள்களும் ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வை தான் நாம் சூரிய கிரகணம் என்று அழைக்கிறோம். மேலும் இந்த சூரிய கிரகணத்தின் (Solar Eclipse in Tamil) போது நிலவின் நிழல் பூமியின் மீது படர்ந்து செல்கிறது.
இந்த சூரிய கிரகணத்தின் போது சூரியனை நிலவானது மறைப்பது போல காட்சி தோன்றும். சில இடங்களில் முழுதாக சூரிய கிரகணம் தோன்றும். சில இடங்களில் பகுதி கிரகணமாகவும், சில இடங்களில் நெருப்பு வளைய சூரிய கிரகணமாகவும் தோன்றும். அவற்றைப்பற்றி பார்க்கலாம்.
முழு சூரிய கிரகணம்
சூரிய கிரகணம் மூன்று வகைப்படும். அதில் முதல் வகை தான் முழு சூரிய கிரகணம். இந்த நிகழ்வின் போது சந்திரனானது பூமிக்கு மிக அருகில் இருக்கும். சூரியனை ஒப்பிடும் போது சந்திரன் சிறிய அளவுடையது தான் எனினும் பூமிக்கு மிக அருகில் இருப்பதால் சூரியனை முழுவதுமாக மறைத்து விடுகிறது. எனவே நாம் சூரியனை முழுவதுமாக பூமியிலிருந்து பார்க்க முடியாது. இந்த நிகழ்வின் போது பூமியானது இரவு நேரத்தை போல் காட்சி அளிக்கும்.
பகுதி சூரிய கிரகணம்
சூரிய கிரகணத்தின் பகுதி சூரிய கிரகணம் இரண்டாவது வகை ஆகும். இந்த வகையான கிரகணத்தில் சூரியனின் ஒரு பகுதி மட்டும் மறைக்கப்படுகிறது. இந்நிகழ்வின் போது சூரியன் மற்றும் பூமிக்கு இடையில் வரம் சந்திரன் சூரியனின் ஒரு பகுதி மட்டும் மறைக்கும். இதனால் சூரியனின் ஒரு பகுதி சந்திரனால் மறைக்கப்படும். இந்த நிகழ்வில் சூரியனின் ஒரு பகுதி சந்திரனால் மறைக்கப்படுவதால் இது பகுதி சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.
நெருப்பு வளைய சூரிய கிரகணம்
நாம் முதல் வகையாக பார்த்த முழு சூரிய கிரகணத்தின் போது சில நேரங்களில் சந்திரனால் சூரியனை முழுவதுமாக மறைக்க முடியாது. இதன் காரணமாக இந்த நிகழ்வில் நிலவால் மறைக்கப்பட்ட பகுதி கருப்பாகவும் அதன் விளிம்புகள் எல்லாம் நெருப்பு வளையம் போலவும் தோன்றும். இது போன்ற கிரகணத்தை தான் நாம் கங்கண சூரிய கிரகணம் அல்லது நெருப்பு வளைய சூரிய கிரகணம் என்று அழைக்கிறோம்.
சூரிய கிரகணம் 2024
இந்த வருடத்தில் இரண்டு முறை சூரிய கிரகணம் ஏற்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே சூரிய கிரகணம் ஏற்படும் தேதியை (Surya Grahanam Dates in 2024) பார்க்கலாம்.
முதல் சூரிய கிரகணம்
இந்த வருடத்தின் முதல் சூரிய கிரகணம் வருகின்ற ஏப்ரல் மாதம் 8-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த கிரகணமானது முழு சூரிய கிரகணம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூரிய கிரகணத்தின் நேரத்தை (Surya Grahanam Timings 2024) இப்போது பார்க்கலாம்.
- சூரிய கிரகணம் 2024 நேரம்: மாலை 4.38 மணிமுதல் இரவு 8.52 வரை
மேலும் இந்த கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
கடைசி சூரிய கிரகணம்
இந்த வருடத்திற்கான கடைசி சூரிய கிரகணமானது அக்டோபர் மாதம் 2-ம் தேதி நிகழ உள்ளது. இந்த கிரகணமானது மாலை நேரத்தில் நிகழவுள்ளது. இதன் காரணமாக இந்த கிரகணத்தையும் இந்தியாவில் பார்க்க முடியாது என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த கிரகணத்தின் நேரம் இந்திய நேரப்படி இரவு 9.12 மணி முதல் மறுநாள் அக்டோபர் 3-ம் தேதி நள்ளிரவு 3.17-க்கு முடிவடைகிறது.
சூரிய கிரகணத்தை பார்ப்பது எப்படி
- முழுமையான சூரிய கிரகணத்தை பார்க்கும் போது பாதுகாப்பு வழிமுறைகள் மிகவும் முக்கியமாகும். இதற்காக சூரியனைப் பார்ப்பதற்காக வடிவமைக்கப்பட்ட சோலார் பில்டர் அல்லது சூரிய கிரகணத்தை பார்க்க கூடிய கண்ணாடி போன்ற இதற்காக தயாரிக்கப்பட்ட போன்ற கருவிகளை பயன்படுத்தி தான் பார்க்க வேண்டும்.
- மேலும் இது போன்ற சரியான கண் பாதுகாப்பு இல்லாமல் சூரியனை நேரடியாகப் பார்ப்பது முற்றிலும் பாதுகாப்பற்றது. இதனால் கண் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
- கிரகணத்தின் போது பிரகாசமான சூரியனின் எந்தப் பகுதியையும் வெறும் கண்ணால் பார்க்க கூடாது. மேலும் தொலைநோக்கி அல்லது கேமராவைப் பயன்படுத்தி பார்த்தால் அது கடுமையான கண் பாதிப்பை ஏற்படுத்த கூடும். எனவே கிரகணத்தின் போது சூரிய பார்வை கண்ணாடிகளை பயன்படுத்த வேண்டும் இது கிரகண கண்ணாடிகள் என்றும் அழைக்கப்படுகிறது.
- பாதுகாப்பாக பார்க்க விரும்பினால் ப்ரொஜெக்டரைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது. இந்த முறையில் நம்மால் முழுமையாக கிரகணத்தை பார்க்க முடியும்.
சூரிய கிரகணத்தின் போது செய்யகூடாதவை
- சூரிய கிரகணத்தின் போது நாம் அதிக பட்சம் எந்த வேலைகளையும் செய்யாமல் இருப்பது மிகவும் நல்லது.
- முக்கியமாக சூரிய கிரகணத்தின் போது இறைவழிபாடு செய்தல் நன்று. இந்த நாளில் வழிபாடு செய்வது மற்ற நாட்களை விடவும் அதிக பலன்களை தரும் என்று கூறப்படுகிறது.
- சூரிய கிரகணம் முடிந்த பிறகு குளித்துவிட்டு புதிய ஆடைகளை மாற்றுவது போன்ற பழக்கத்தை நாம் அனைவரும் பின்பற்றலாம்.
சூரிய கிரகணத்தின் போது செய்யகூடாதவை
- சூரிய கிரகணத்தின் போது வெளிவரும் கதிர்வீச்சுகளால் பல உடல்நல பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளது. எனவே கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகள் வீட்டுக்குள் இருக்க வலியுறுத்தப்படுகிறார்கள்.
- கிரகணத்திற்கு முன்பு சமைக்கப்பட்ட எந்த உணவையும் உண்ண கூடாது. இது சில உடல் உபாதைகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
- கிரகணத்தின் போது உணவு உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். எந்தவிதமான உணவையும் எடுத்துக் கொள்ள கூடாது.
- கிரகணம் முடிந்த பிறகு எளிதில் ஜீரணமாகும் உணவுகள் மட்டுமே உட்கொள்ள வேண்டும்.
இப்பதிவில் நாம் சூரிய கிரகணம் பற்றிய முக்கிய தகவல்களை பார்த்துள்ளோம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.
இதையும் படியுங்கள்: Agni Natchathiram 2024: செய்ய வேண்டியது மற்றும் செய்யக்கூடாதது என்ன? |
சூரிய கிரகணம் – FAQ
1. இந்த ஆண்டிற்காக சூரிய கிரகணம் எந்த நாளில் வருகிறது?
இந்த வருடத்தில் வருகின்ற ஏப்ரல் 8-ம் தேதி மற்றும் அக்டோபர் 3-ம் தேதி என இரண்டு முறை சூரிய கிரகணம் வருகிறது.
2. ஏப்ரல் 8-ம் சூரிய கிரகணத்தின் நேரம்?
ஏப்ரல் 8-ம் சூரிய கிரகணத்தின் நேரம் மாலை 4.38 மணிமுதல் இரவு 8.52 வரை ஆகும்.
3. அக்டோபர் 3-ம் சூரிய கிரகணத்தின் நேரம்?
அக்டோபர் 3-ம் சூரிய கிரகணத்தின் நேரமானது மாலை 9.12 மணி முதல் மறுநாள் அக்டோபர் 3-ம் தேதி நள்ளிரவு 3.17-க்கு முடிவடைகிறது.