கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு ஆன்லைன் மூலம் செய்யப்படும் வேலைகளை தொடர்ந்து அதிகரித்து விட்டது. பண பரிவர்த்தனைகள் தற்போது அதிக அளவில் நடைபெற்று வருகிறது. அதேபோல் தான் வீட்டிற்கு தேவையான அடிப்படை தேவைகள் அனைத்திற்கும் அதிகம் ஆன்லைன் செயல்முறைகள் தான் பயன்படுத்தப்படுகிறது. அதிலும் குறிப்பாக உணவுகள் ஆதிக அளிவில் ஆன்லைன் மூலம் தான் ஆர்டர் செய்ப்படுகிறது.
இதுபோன்ற உணவு விநியோகம் செய்வதற்கு பல செயலிகள் உள்ளன. ஆனால் உணவு மற்றும் உணவு பொருட்களை விநியோகம் செய்யும் நிறுவனங்களில் முக்கிய இடத்தை பிடிப்பது ஸ்விக்கி தான். இந்தியாவில் பல தரப்பு மக்களால் இந்த செயலி பயன்படுத்தப்படுகிறது. இந்த காலகட்டத்தில் வீடுகளில் சமைத்து உண்பவர்களை விட ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து உண்பவர்களே அதிகமாக உள்ளனர்.
இந்த நிலையில் தான் உணவு விநியோகத்தில் முக்கிய இடத்தை பிடிக்கும் நிறுவனமான Swiggy நிறுவனத்திற்கு மிகப்பெரிய தொகை இழப்பு (Money loss for Swiggy) ஏற்ப்பட்டுள்ளது. இந்த தகவல் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2022 முதல் 2023-ம் ஆண்டு வரையிலான நிதியாண்டில் இந்த Swiggy நிறுவனத்திற்கு சுமார் 500 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் கூறவேண்டும் என்றால் 3,775 கோடி இழப்பை Swiggy நிறுவனம் (Swiggy Money Loss) சந்தித்துள்ளது.
பங்கு சந்தையில் பொது பங்கு வெளியீட்டுக்காக அந்த நிறுவனம் அளித்திருந்த ஆவணத்தில் இந்த தகவல் (Swiggy Money Loss Issue) உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே இந்த நிறுவனத்தில் நிதிநிலையை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக வேலை நீக்கம் மற்றும் செலவுகளை குறைத்தல் போன்ற நடவடிக்கைகளை இந்த நிறுவனம் மேற்க்கொண்டு வருகிறது.
இதையும் படியுங்கள்: இன்ஸ்டா மற்றும் பேஸ்புக்கை தொடர்ந்து LinkedIn-ல் அறிமுகமாகும் புதிய ஃபீச்சர்..! |