தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் கார்த்திக். இவர் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் தான் பையா. இந்த படம் நடிகர் கார்த்திக்கின் இரண்டாவது திரைப்படம் ஆகும். இந்த படத்தில் ஒரு நகரத்து இளைஞனாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
இந்த படம் கடந்த 2010-ம் ஆண்டு வெளியானது. இப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த படமாகவும் மாறியது. இப்படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்கி இருந்தார். இப்படத்தில் நடிகர் கார்த்தி, தமன்னா, ஜெகன் உட்பட பலர் நடித்திருந்தனர்.
இப்படம் வெளிவந்து 14 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் தான் இந்த படம் விரைவில் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளது. இந்த படத்திற்கு இன்றுவரையில் பல ரசிகர்கள் உள்ளனர். இந்த படத்தின் வெற்றிக்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணம் இந்த படத்திற்கு தேர்வு செய்யப்பட்ட நடிகர்கள் தான். அதிலும் இந்த படத்தில் ஹீரோயின் கதாபாத்திரத்திற்கு தமன்னா அவ்வளவு அழகாக பொருந்தி இருப்பார்.
இந்த நிலையில் தான் தற்போது பையா படம் குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலின் படி இந்த படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்த நடிகை தமன்னா இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக தற்போது தமிழ் திரையுலகின் முக்கிய முன்னணி நடிகைகளாக இருக்கும் இருவர் தான் இப்படத்தில் நடிக்க இருந்தனர் என்று தகவல் (Paiyaa Movie First Heroine) வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்த நடிகை நயன்தாராவை தான் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அப்போது உச்சத்தில் இருந்த நயன்தாரா இந்த படத்திற்கு 1 கோடி சம்பளமாக கேட்டுள்ளாராம். அந்த சம்பளத்தை தயாரிப்பாளரால் கொடுக்க முடியாமல் போன காரணத்தால், இந்த படத்தில் இருந்து அவர் விலகியுள்ளார்.
அவருக்கு பின் இப்படத்தில் நடிப்பதற்கு நடிகை திரிஷாவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் அவரும் நடிக்க முடியாமல் போக இறுதியாக தமன்னாவை இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆனார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள்: பையா 2: இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்ட பையா படத்தின் இரண்டாம் பாகம்..! சூப்பர் அப்டேட்..! |