கல்லூரி படத்தில் நடித்த ஷோபனாவை தான் தற்போது வரை அனைவரும் பிடிச்சிருக்கு என்று சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியில் (Tamanna’s opinion about Kalloori film) தெரிவித்திருந்தார். கல்லூரி படம் தற்போது வரை அனைவருக்கும் பிடித்த படமாக தான் உள்ளது. கிராமத்து சூழலை மிக அழகாக எடுத்துரைக்கும் படமாக, ஒரு கல்லூரியில் நடக்கும் நினைவுகளை அழகாக வெளிப்படுத்தும் திரைப்படம் தான் கல்லூரி படம்.
இந்த திரைப்படம் 2007 ஆம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில், இயக்குனர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படத்தின் நினைவுகளை நடிகை தமன்னா பகிர்ந்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகை தமன்னா, அகில், ஹேமா, மாயாரெட்டி, அருண்குமார், அலெக்ஸ், பரணி, பாலமுருகன் ஆகியோர் நடித்திருப்பார்கள்.
நடிகை தமன்னா, ஷோபனா என்ற அமைதியான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துவந்தார். கிராமத்தில் நண்பர்களின் கூட்டத்தில் சேரும் ஒரு நகரத்து பெண்ணாக பெங்களூரில் இருந்து வந்த ஷோபனா என்ற கதாபாத்திரத்தை அவர் ஏற்று நடித்திருப்பார். அதில் மிகவும் அழகாகவும், அமைதியான பெண்ணாகவும், தனது சிறப்பான நடிப்பை ஏற்று நடித்திருப்பார்.
சமீபத்தில் நடிந்த நேர்காணலில் தமன்னா (kalloori movie tamanna) தன்னுடைய திரைப்பயணத்தில் சிறப்பாக அமைந்த ஒரு கதாபாத்திரம் ஒன்று தான் கல்லூரியில் ஷோபனா என்ற கதாபாத்திரம். அந்த படத்தில் நான் நடிக்கும் போது 17 வயது தான் ஆனது. அந்த படத்தில் எந்த மேக்ப் இல்லாமல் வீட்டில் இருக்கும் ஒரு சாதாரண பெண்ணாக அதில் நடித்திருப்பேன். அந்த படம் ஒரு யதர்தமான படமாக எனக்கு அமைந்திருந்தது. அதில் உள்ள கதாபாத்திரத்தை அப்படியே புரிந்துக்கொண்டு உணர்வுப்பூர்வமாக நடித்தது தான் அந்த கதாபாத்திரம்.
தற்போது அவர் இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை 4 படத்தின் கதாநாயகியாக நடித்துளார். இந்த படத்தில் ராஷி கண்ணாவும் இணைந்து நடித்துள்ளார். மேலும் சிம்ரன், குஷ்பு ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படம் மே 4 நாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படம் மே 3 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரண்மனை 4 படத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.