வரலாறு

Tamil Nadu State Symbols: தமிழ்நாட்டின் சின்னங்கள் மற்றும் அதன் சிறப்புகள்..!

இந்த பதிவில் தமிழ் நாட்டின் சின்னங்கள் (Tamil Nadu State Symbols) மற்றும் அதன் சிறப்பகள் பற்றி பார்க்கலாம். இந்தியாவில் மொத்தம் 28 மாநிலங்கள் உள்ளன. ஒவ்வொரு மாநிலங்களும் அதற்கென்று தனி சிறப்புகளையும் பெருமைகளையும் கொண்டுள்ளன.

இந்த பதிவில் தென்னிந்தியாவில் உள்ள தமிழகத்தின் பெருமை மிக்க சின்னங்களை (Tamil Nadu State Symbols in Tamil) பற்றி பார்க்க உள்ளோம். தமிழகத்தின் மேற்க்கு பகுதியல் இயற்கை வளம மிகுந்த கேரள மாநிலமும், வடக்கு பகுதியில் கர்நாடக மாநிலமும், கிழக்கு பகுதியில் வங்காள விரிகுடா பகுதியும் மற்றும் தெர்கில் இந்திய பெருங்கடலும் உள்ளது.

இந்தியாவில் உள்ள மாநிலங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியான சின்னங்கள் இருக்கும். மாநில சின்னம், மரம், விலங்கு, பறவை மற்றும் மலர் போன்ற பல சின்னங்கள் இருக்கும். இந்த சின்னங்கள் அந்த மாநிலத்தின் பண்பாட்டு சின்னங்களை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன. இந்த பதிவில் தமிழ்நாட்டிற்கான மாநில சின்னங்கள் (Tamil Nadu Symbols) பற்றி முழுவதுமாக பார்க்கலாம்.

தமிழ்நாடு மாநில சின்னங்கள் – State Symbols of Tamil Nadu (Tamil Nadu State Symbols)

தமிழ்நாட்டின் சின்னங்கள்தமிழ்நாட்டின் சின்னங்களின் பெயர்
அரசுதமிழ்நாடு அரசு
மொழிதமிழ் மொழி
பொன்மொழிவாய்மையே வெல்லும்
தமிழ்நாட்டின் பாடல் (பண்)தமிழ்தாய் வாழ்த்து
தமிழ்நாடு மாநில தினம்நவம்பர் 1
நடனம்பரதநாட்டியம்
விலங்குவரையாடு
பறவைமரகதப்புறா
மலர்காந்தள்
மரம்பனை மரம்
விளையாட்டுசடுகுடு (கபடி)
பழம்பலா
பூச்சிதமிழ் மறவன் பட்டாம்பூச்சி

தமிழ்நாடு

தமிழ்நாடு இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் ஒன்று ஆகும். தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை ஆகும். முன்பு தமிழ்நாடு சென்னை மாகாணம் (Madras State என அழைக்கப்பட்டு வந்தது. அதன பிறகு மொழி வாரியாக மாநிலங்களில் பெயர் வைக்கப்பட வேண்டும் என பல போராட்டங்கள் நடைபெற்றது. அதன் பிறது 1969 ஆம் ஆண்டு மெட்ராஸ் என்ற பெயர் தமிழ்நாடு (Tamil Nadu) என பெயர் மாற்றப்பட்டது.

மாநில விலங்கு (State Animal of Tamil Nadu)

தமிழ்நாட்டின் தேசிய விலங்கு வரையாடு ஆகும். இந்த வகைய ஆடுகளை நீலகிரி மழையை பூர்விகமாக கொண்டுள்ளது. இதன் காரணமாக இது நீலகிரி வரையாடு (Nilgiri Tahr) எனவும் அழைக்கப்படுகிறது. மேற்க்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள சிறப்புமிக்க உயிரினங்களில் இதுவும் ஒன்று. இந்த வரையாடு 4000 அடி உயரத்திற்கு மேல் உள்ள மலைகளில் மட்டும் வாாமும்.

வரையாடு = வரை + ஆடு என பிரித்து எழுதலாம். வரை என்பதன் பொருள் மலை, குன்று, மலை உச்சி ஆகும். ஆடு என்பது ஒரு விலங்கு ஆகும். தற்போது அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றான வரையாடு தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் ஒரு சில பகுதியளில் தான் வாழ்ந்து வருகின்றன. தற்போது தமிழ்நாட்டில் சில நூறு வரையாடுகளே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மாநில பறவை (State Bird of Tamil Nadu)

மாநில பறவை தமிழ்நாட்டின் தேசிய பறவை ஆகும். Common emerald dove பச்சைப் புறா எனவும், பச்சை இறகுப் புறா எனவும் அழைக்கப்படுகிறது. இந்த பறவை கடந்த 10 ஆண்டுகளில் முப்பது சதவீதம் அழிந்து விட்டதாக கூறப்படுகிறது.

மாநில மலர் (State Flower of Tamil Nadu)

செங்காந்தள் அல்லது காந்தள் என அழைக்கப்படும் பூ தான் தமிழ்நாட்டின் மலர் சின்னம் ஆகும். இந்த மலர் ஆப்பிரிக்க மற்றும் ஆசிய பகுதிகள் தாயகமாகக் கொண்ட பூ ஆகும். இந்த மலரின் அனைத்துப் பகுதிகளும் கோல்ச்சிசின் (colchicine) என்ற அல்கலாய்டுகள் நிறைந்துள்ளது. ஆனால் இது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது ஆகும். இதன் இலைகள் மற்றும் தண்டுகள் மனிதர்களின் தோல் மீது பட்டால் அரிப்பு ஏற்படும். அதே நேரத்தில் இதில் அதிக மருத்துவ குணமும் உண்டு.

மாநில பழம் (State Fruit of Tamil Nadu)

பலா (Jackfruit) தான் தமிழ்நாட்டின் மாநில பழம் ஆகும். முக்கனிகளில் ஒன்று பழம் தான் பலா ஆகும். இந்த பழத்தின் வெளிப்புறம் முள் வடிவில் இருக்கும். ஆனால் பழத்தின் உட்புறம் மிகவும் இனிப்பாக இருக்கும். இது பெரிய பழமாக இருக்கும். இந்த பலா பழம் தான் மரத்தில் காய்க்கும் பெரிய வகை பழம் ஆகும்.

மாநில மரம் (State Tree of Tamil Nadu)

தமிழ்நாட்டின் மாநில மரம் பனை மரம் ஆகும். இந்த பனை மரம் ஆசியப் பனை எனவும் அழைக்கப்படுகிறது. இந்த பனை மரம் ஆனது தமிழ்நாடு மற்றும் இலங்கை போன்ற தெற்காசிய பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது.

மாநில நடனம் (State Dance of Tamil Nadu)

பரதநாட்டியம் (Bharatanatyam) தான் தமிழ்நாட்டின் மாநில நடனம் ஆகும். இந்த பரதநாட்டியம் என்பது தொண்மை வாய்ந்த கலை ஆகும். இந்த நடனம் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் மிகவும் பிரபலமானது ஆகும்.

மாநில விளையாட்டு (State Game of Tamil Nadu)

தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு கபடி (Kabaddi) ஆகும். இது சடுகுடு அல்லது பலிஞ்சடுகுடு எனவும் அழைக்கப்படுகிறது. இது மிகவும் தனித்துவம் வாய்ந்த விளையாட்டு ஆகும். இந்த விளையாட்டு ஆனது தமிழர்களின் மரபு விளையாட்டுகளில் ஒன்று ஆகும். வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டு முன்பு தமிழர்கள் பயிற்சி செய்வதற்காக கபடி விளையாடப்பட்டு என கூறப்படுகிறது. கை + பிடி என்பதே கபடி ஆகும்.

சின்னங்கள் என்பது ஒவ்வொரு நாட்டின் அல்லது மாநிலத்தின் அடையாளம் ஆகும். அந்த நாட்டின்/ மாநிலத்தின் பண்பாட்டையும் உரிமைகளையும் உணர்த்தும் வகையில் அடையாளமாக இந்த சின்னங்கள் விளங்குகின்றன. இந்த பதிவின் மூலம் தமிழ்நாட்டின் சின்னங்கள், முக்கியத்துவங்கள் மற்றும் அதன் சிறப்பம்சங்கள் பற்றி தெரிந்து கொண்டாம்.

மேலும் படிக்க: National Symbols of India: இந்திய தேசிய சின்னங்கள் மற்றும் அதன் முக்கியத்துவங்கள்..!

Tamil Nadu State Symbols – FAQ

1. தமிழ்நாடு மாநில தினம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது?

தமிழ்நாடு மாநில தினம் நவம்பர் மாதம 01 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

2. தமிழ்நாடு என பெயர் எப்போது மாற்றப்பட்டது?

மெட்ராஸ் என்று இருந்த பெயர் 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்டது.

3. தமிழ்நாட்டின் சின்னத்தில் உள்ள கோவில் எங்குள்ளது?

விருதுநகர் மாவட்டம் உள்ள ஶ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவில் கோபுரம் தான் தமிழ் நாட்டின் சின்னத்தில் இடம் பெற்று உள்ளது.

Abinaya G

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago