தமிழ்நாட்டில் தொடர்ந்து 3 நாட்களுக்கு மது கடைகள் மூடப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் நாளை ஏப்ரல் 19-ஆம் தேதி மக்களவை தேர்தல் வருவதை முன்னிட்டு தமிழகத்தில் தொடர்ந்து காவல் துறையினர்கள் கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இதனால் தமிழகத்தில் தாெடர்ந்து பல கெடுபிடிகள் அதிகமாகி வருகிறது. இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 17) தேதி முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு (3 days holiday for tasmac in tamilnadu 2024) தமிழகத்தில் உள்ள டாஸ்மார்க் கடைகள் மூடப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான ஜூன் 4-ஆம் தேதியும் தமிழகத்தில் டாஸ்மாக் மூடப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் (3 days holiday for Tasmac) உள்ள மது பிரியர்களை கவலையடைய செய்திருந்தது. ஆனால் குடிமகன்கள் தங்களுக்கு தேவையான மதுப்பாட்டில்களை முன்னதாகவே வாங்கி வைத்துக்கொள்வார்கள் என்றும் எதிர்ப்பார்க்கப்பட்டது.
இதையெடுத்து கடந்த 16-தேதி தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுபிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களுக்கு தேவையான மதுப்பாட்டில்களை வாங்கி சென்றனர். அன்றை தினம் டாஸ்மாக் கடைகள் திருவிழா கோலம் கண்டது. தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால் பண்டிகை காலங்களின் வசூல் (TASMAC Vasool) போல இந்த தினங்களில் மதுவிற்பனை நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
அதன்படியே தமிழகத்தில் கடந்த 16-ஆம் தேதி மட்டும் ரூ.289.29 கோடிக்கு மது விற்பனை நடந்திருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் மட்டும் அதிகப்பட்சமாக ரூ.68.35 கோடிக்கு விற்பனை (Liquor sales collection in TN) நடைபெற்றுள்ளது.
திருச்சி மண்டலத்தில் ரூ.58.65 கோடியும், சேலம் மண்டலத்தில் ரூ. 57.30 கோடியும், மதுரை மாவட்டத்தில் ரூ.55.87 கோடியும், கோவை மண்டலத்தில் ரூ.49.10 கோடியும், என ஒரே நாளில் ரூ289.29 கோடிக்கு மது விற்பனை ஆனது என நிர்வாகம் தெரிவித்துள்ளது.