HomeAutomobilesகார் விலையை அதிரடியாக குறைத்த டாடா..! இப்பவே வாங்கிடுங்க..!

கார் விலையை அதிரடியாக குறைத்த டாடா..! இப்பவே வாங்கிடுங்க..!

வாகனங்கள் விற்பனை மற்றும் உற்பத்தியில் பல நிறுவனங்கள் இருந்தாலும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிறுவனமாக உள்ளது தான் டாடா நிறுவனம்.இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்த நிறுவனத்தின் பிரபலத்திற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் அதில் முக்கிய காரணம் என்றால் அது நம்பிக்கை மற்றும் வாகனங்களின் தரம் தான். மேலும் விலையும் மக்களுக்கு ஏற்றார் போல் இருக்கும் இவைகள் தான் இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் காரணமாக உள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த நிறுவனம் இரண்டு மாடல் கார்களின் விலையை குறைத்துள்ளது. இந்த தகவல் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது Nexon EV மற்றும் Tiago EV ஆகிய இரண்டு வகையான மின்சார கார்களில் விலையை (Electric Car Price Down) குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பில் இந்த இரண்டு மாடல் மின்சார வாகனங்களின் விலையை அதிகபட்சமாக ரூ.1,20,000 வரை குறைப்பதாக இந்நிறுவனம் (Tata Cars Price Down) அறிவித்துள்ளது.

இப்போது மின்சார வாகனங்களின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பேட்டரி செல்களின் விலை குறைந்துள்ளது. இதன் காரணமாக தான் டாடா மோட்டார்ஸ் இந்த கார்களின் விலையை (Electric Car Vilai Kuraippu) குறைத்துள்ளது. மேலும் Nexon மற்றும் Tiago EV ஆகிய இரண்டு வாகனங்களின் விலைக் குறைப்பை டாடா நிறுவனம் அறிவித்துள்ளது. எனினும் Punch EV கார்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்பதையும் தெரிவித்துள்ளது.

Electric Car Vilai Kuraippu

இந்த விலைக் குறைப்பு (Car Price Down) காரணமாக Tata Tiago EV காரின் விலை இந்தியாவில் ரூ.7.99 லட்சத்தில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் Nexon EV காரின் விலை ரூ.14.49 லட்சத்தில் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் Nexon EV கார்களின் விலை ரூ.70,000 வரையும் மற்றும் Tiago EV காரின் விலை ரூ.1.2 லட்சம் வரை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் எலக்ரிக் கார்கள் வாங்குவது இன்னும் சுலபமாக இருக்கும். மேலும் இது மக்களிடையே மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்: UPI: பணம் தவறாக அனுப்பிட்டிங்களா..! இதை மட்டும் செய்யுங்க..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular