தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் கவனம் செலுத்தி வரும் நடிகை தான் ஸ்ருதிஹாசன். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியானபிராபாஸின் சலார் திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை தொடர்ந்து இவர் The Eye மற்றும் சென்னை ஸ்டோரி எனும் இரண்டு ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். மேலும் டகோயிட் (Dacoit) எனும் தெலுங்கு படத்திலும் ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளார்.
இது போன்ற பிஸியான ஷெட்யூலில் கமலுடன் இணைந்து ஒரு ஆல்பம் ஒன்றிலும் பணியாற்ற உள்ளதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிவித்து இருந்தார். மேலும் இந்த இந்த இசை ஆல்பத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் தான் கடந்த மாதம் லோகேஷ் கனகராஜ் ஸ்ருதிஹாசன் இணைந்து இருக்கும் ஒரு போஸ்டர் வெளியானது. இது ராஜ்கமல் நிறுவத்தின் மூலம் வெளியிடப்பட்டது. இந்த போஸ்டர் லோகேஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து நடிக்கும் ஆல்பத்தில் போஸ்டர் ஆகும். இந்த ஆல்பத்திற்கு இனிமேல் என்று தலைப்பு (Lokesh Shruti Haasan Album Name) வைக்கப்பட்டுள்ளதாக கடந்த 14 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
இந்த ஆல்பத்திற்கு (Lokesh Shruti Haasan Album Song) ஸ்ருதிஹாசன் தான் இசையமைக்கிறார் மேலும் இந்த பாடலின் வரிகளை கமல்ஹாசன் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை துர்கேஷ் பிரபாகர் இயக்கியுள்ளார் மற்றும் இந்தப் பாடலில் (Inimel Album Song) லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளார். இந்த ஆல்பத்தின் மூலமாக லேகேஷ் நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுவதோடு வசூல் ரீதியாகவும் வெற்றி பெறுகிறது. தொடர் வெற்றி படங்கள் காரணமாக பிரபல முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வலம் வருகிறார். இந்நிலையில் தான் தற்போது இவர் இந்த ஆல்பத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இந்த இனிமேல் பாடலின் டீசர் (Inimel Album Song Teaser) நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
No Winners No Losers, #Inimel only Players
— Raaj Kamal Films International (@RKFI) March 20, 2024
Teaser from 6:30pm tomorrow#Ulaganayagan #KamalHaasan #InimelIdhuvey@ikamalhaasan #Mahendran @Dir_Lokesh @shrutihaasan @RKFI @turmericmediaTM @IamDwarkesh @bhuvangowda84 @philoedit #SriramIyengar @yanchanmusic @SowndarNallasa1… pic.twitter.com/gZRmwunErm