Homeசெய்திகள்இந்தியாபெண் எம்எல்ஏ மரணம்..! 10 நாட்களில் மீண்டும் அரங்கேறிய துயரம்..!

பெண் எம்எல்ஏ மரணம்..! 10 நாட்களில் மீண்டும் அரங்கேறிய துயரம்..!

சமீப காலங்களில் சாலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் சாலையில் நடந்து செல்ல கூட அஞ்சும் நிலை தற்போது ஏற்பட்டுவிட்டது. இந்நிலையில் தான் தற்போது MLA ஒருவர் விபத்தின் காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தின் எதிர்க்கட்சியாக உள்ள பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்) என்னும் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ லாஸ்யா நந்திதா (Telangana MLA Lasya Nandita) இன்று ஹைதராபாத்தில் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். இவர் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத்தில் சுல்தான்பூர் ஓ.ஆர்.ஆர் பகுதியில் காரில் பயணம் செய்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த கார் கட்டுப்பாட்டை இழந்தது.

இதன் காரணமாக சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதியது. இதனால் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த MLA நந்திதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் கார் ஓட்டுநர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் இவருக்கு நார்கட் பள்ளி அருகே செர்லப்பள்ளி என்ற இடத்தில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தலையில் காணத்துடம் லாஸ்யா நந்திதா தப்பினார். இந்நிலையில் அந்த விபத்து ஏற்பட்ட 10 நாட்களில் நடந்த விபத்தில் லாஸ்யா உயிரிழந்து சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Telangana MLA Lasya Nandita Car Accident

இவரின் இந்த திடீர் மறைவுக்கு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இரங்கல் தெரிவிக்கும் விதமாக தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அப்பதிவில் அவர் கூறியதாவது, கன்டோன்மென்ட் எம்.எல்.ஏ லாஸ்யா நந்திதாவின் (MLA Lasya Nanditha) மரணம் என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நந்திதாவின் அப்பா ஸ்வர்கிய சயன்னாவுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் அவர் மறைந்தார். அதே மாதத்தில் லாஸ்யா நந்திதாவும் திடீரென மரணமடைந்திருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்: ரஞ்சி போட்டியில் இருந்து விலகிய முக்கிய வீரர்..! இதுதான் காரணமா?
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular