தமிழகத்தை பொறுத்தவரையில் வெள்ளித்திரைக்கு அதிக அளவிலான ரசிகர்கள் உள்ளனரோ என்னவே சின்னத்திரைக்கு எக்கசக்க ரசிகர் உள்ளனர். அதிலும் சீரியல்களுக்கு உள்ள ரசிகர் பட்டாளமே எப்போதும் தனி தான். இந்நிலையில் தான் சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி தான் விஜய் டிவி. இந்த டிவியில் காலை முதல் இரவு வரை அனைத்து நேரங்களிலும் சீரியல்கள் ஒளிப்பரப்பப்பட்டு இருக்கும்.
அதிகபட்சம் இந்த டிவியில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள் அனைத்தும் பிரபலம் தான் ஒவ்வொரு சீரியல்களுக்கும் தனி தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் தான் தற்போது ஒரு புதிய சீரியல் விஜய் டிவியில் (Vijay TV New Serial Time) ஒளிப்பரப்படவுள்ளது. இதன் காரணமாக விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வரும் முக்கிய சீரியல் ஒன்றில் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த புதிய சீரியலின் பெயர் வீட்டுக்கு வீடு வாசப்படி என்பதாகும். இந்த சீரியல் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது (Veetuku Veedu Vasapadi Serial Time). இதன் காரணமாக அந்த நேரத்தில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான சீரியலான மோதலும் காதலும் இனி இந்த புதிய சீரியலுக்கு முன்னதாகவே மாலை 6 மணிக்கு மாற்றப்பட்டு உள்ளது (Modhalum Kaadhalum Serial Time).
இது மோதலும் காதலும் சீரியலின் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள சீரியல் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த புதிய சீரியல் எப்படி இருக்கப்போகிறது என்றும் இது மக்களுக்கு பிடிக்கிறதாக என்பதையும் நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்: மீண்டும் ஒரு காதல் கதை..! மௌனராகம் சீரியலால் இணைந்த ஜோடி..! இவங்க நம்ம லிஸ்ட்லயே இல்லையே..! |