யூடியூபில் மிகவும் பிரபலமாக அனைவராலும் பார்க்கப்படும் சேனல் தான் வில்லேஜ் குங்கிங் சேனல். இந்த சேனல் தற்போது வரை 2.42 கோடி subscribers- ஐ (Village Cooking Channel total subscribers in 2024) கொண்டுள்ளது. மேலும் டயமண்ட் கிரியேட்டர் விருதைப் பெறும் முதல் தமிழ் YouTube சேனல் என்ற பெருமையும் இந்த சேனல் பெற்றுள்ளது.
இந்த சேனலுக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல், இந்தியா மற்றும் உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் வில்லேஜ் குங்கிங் சேனலை சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி பாராட்டி பேசியுள்ளார்.
ஹைதராபாத் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சிரஞ்சீவி இந்த நிதியாண்டின் இறுதி நாள் என்பதால் நானும், என்னுடைய வழக்கறிஞர்கள் மற்றும் ஆடிட்டருடன் மீட்டிங்கில் இருந்தேன். அப்போது அவர்கள் எனக்கு பவர் பாயிண்ட் பிரசண்டேஷன் போட்டு காண்பித்து, ஏதோ டெக்னிக்கலாக பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் பேசுவது ஒன்றும் எனக்கு புரியவில்லை.
இது குறித்து அவர் பேசுகையில், நான் என்னுடைய மொபைலில் எனது மகள் கூறிய வில்லேஜ் குக்கிங் சேனல் (Village Cooking Channel) என்ற தமிழகத்தை சேர்ந்த பிரபலமான இந்த சேனலை பார்த்துக்கொண்டிருந்தேன். இதில் அவர்கள் கூறும் எல்லோரும் வாங்க, ஆல்வேஸ் வெல்கம்ஸ் யூ என்று அவர்கள் கூறுவது எனக்க மிகவும் பிடித்திருந்தது.
இதில் வேடிக்கை என்வென்றால் மீட்டிங்கில் என்னுடைய குழுவினர்கள், நான் அவர்கள் கூறுவதை குறிப்பு எடுத்துக்கொண்டிருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் நான் அந்த சேனலை ஆர்வமாக கவனித்து ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். இவ்வாறாக அவர் கூறியதும் அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் சிரித்தனர்.
இதனை தொடர்ந்து வில்லேஜ் குக்கிங் சேனல் அட்மின் மற்றும் ஒளிப்பதிவாளர் சுப்புரமணியன் வேலுசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் இது எங்களுக்கு பெருமையான தருணம் எங்களை பெருமைபடுத்தியதற்கு நன்றி சார் என்று பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க: திடீரென திருமணம் செய்த பிக்பாஸ் பாலா..! பொண்ணு யாரு? |
#Chiranjeevi says he watches Tamil Village Cooking Channel and imitates their signature welcome phrase 'Ellaru Vanga, Always welcomes you' pic.twitter.com/SxX4sCSKMJ
— Gulte (@GulteOfficial) March 31, 2024