இன்றைய காலகட்டத்தில் அதிக அளவிலான விபத்துகள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்த விபத்துகளால் அதிக அளவிலான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் பலர் உயிரிழக்கின்றனர். இந்த வரிசையில் தான் தற்போது இதபோன்ற ஒரு தீ விபத்து (Fire accident in Bangladesh) நிகழ்ந்துள்ளது. இந்த தீ விபத்தில் (Bangladesh Fire accident) அதிக அளவிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு 9.45 மணியளவில் வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள பெய்லி சாலையில் இயங்கிவரும் வரும் ஒரு வணிக கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் சமையலறையில் தீ பற்றியது என தகவல் வெளியாகியது. ஆனால் அதன் பிறகு இந்த கட்டிடத்தில் எரிவாயு இணைப்பானது கட்டிடத்தில் அனைத்து தளங்களிலும் இணைக்கப்பட்டு இருந்தது இந்த தீ மளமளவென பரவியது.
கட்டிடத்தில் உள்ள படிகளிலும் புகை மூட்டமாக இருந்ததால் மக்கள் அங்கிருந்து வெளியே வர முடியாமல் அவதிப்பட்டனர். மேலும் பலர் கட்டிடத்தில் உள்ளேயே சிக்கிக்கொண்டனர். அதிலும் பலர் தங்களில் உயிரை காத்துக் கொள்ள கட்டிடத்தில் மேல் இருந்து குதித்தனர்.
அதன் பிறகு சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த தகவலை அறிந்த உடன் அந்நாட்டு சுகாதார அமைச்சர் சமந்தா லால் சென், டாக்கா பகுதியின் சட்டமன்ற உறுப்பினர் AFM பஹாவுதீன் நசிம் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்தனர்.
இந்நிலையில் அதிகாலை 2 மணிக்கு அமைச்சர் சென் செய்தியாளர்களிடம் பேசினார். மேலும் டாக்கா பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 33 பேர் உயிரிழந்ததாக கூறினார். அதன் பிறகு தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களில் கூடுதலாக 10 பேர் மற்றொரு மருத்துவமணையில் உயிரிழந்ததாகவும் கூறினார். அதுமட்டுமின்றி அதன் பின்னர் மத்திய போலீஸ் மருத்துவமனையில் மற்றொருவர் உயிரிழந்தார். இதையடுத்து இதுவரை மொத்தம் 44 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படியுங்கள்: ஹாலிவுட்டில் ரீமேக் ஆகவுள்ள முதல் இந்திய திரைப்படம்..! எந்த படம் தெரியுமா? |