சினிமா

Thala 63: இயக்குனர் இவர்தானா? மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

தமிழ் ரசிகர்களாலும் மற்றும் திரைத்துறையினராலும் அன்புடன் தல என அழைக்கப்படுபவர் அஜித்குமார். தற்போது அஜித்குமார் அவரின் 62 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பெயர் விடாமுயற்சி. இந்த படத்திற்கு பிறகு அவர் நடிக்க இருக்கும் 63-வது (Thala 63) படம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. இந்த செய்தி அஜித் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அஜித் தற்போது நடித்து வரும் படம் தான் விடாமுயற்சி, இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜான் நாட்டில் நடந்து வருகிறது. Vidaa Muyarchi படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, அருண் விஜய், அர்ஜின், ரேஜினா காசன்ட்ரா, ஆரவ், அர்ஜின் தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

மகிழ் திருமேனி இயக்கும் Vidaa Muyarchi படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். விறுவிறுப்பு உள்ள ஆக்ஷன் திரைப்படமாக தயாராகி வரும் இந்த படத்திற்கு பிறகு அஜித் எந்த இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளார் என்ற எதிர்பார்ப்பு ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையில். தற்போது Ajith Next Movie பற்றியும் அதன் இயக்குனர் பற்றியும் தகவல் வெளியாகி உள்ளது.

அஜித்தின் அடுத்த படமான Thala 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவரின் முதல் படமான த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா என்ற படத்தின் மூலம் கவனம் பெற்றார். சிம்புவை வைத்து இவர் இயக்கிய அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. நான்கு வருட இடைவெளிக்கு பின்னர் இவர் இயக்கி வெளியான பகீர் திரைப்படமும் கலவையான விமர்சனத்தையே பெற்றது.

இந்த நிலையில் சென்ற வருடம் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் இவருக்கு பெரும் வெற்றியை பெற்று தந்தது. இந்த மார்க் ஆண்டனி படத்திற்கு பிறகு Adhik Ravichandran -க்கு அஜித்துடன் இணையும் வாய்ப்பு கிடைத்துள்ளது (Adhik Ravichandran Next Movie). அஜித் அடுத்ததாக நடிக்க உள்ள 63 வது படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆவார். இந்த படத்தின் அலுவலக பூஜை பொங்கலன்று எளிமையாக நடைபெற்றது. வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: விடாமுயற்சி: புகைப்படக் கலைஞராக மாறிய தல அஜித்..! புதிய அவதாரம்..!
Abinaya G

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago