தமிழ் சினிமாவின் முக்கிய நாயகனாக இருப்பவர் தான் நாம் அனைவராலும் தளபதி என்று அழைக்கப்படும் விஜய். இவர் தனது கடின உழைப்பால் இப்போது தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்துள்ளார். இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்ததுள்ளார். இந்நிலையில் சில நாட்களாக விஜய் அரசியலுக்கு வரவுள்ளார் என்று தகவல் வெளியானது. இந்த தகவல் தற்போது உறுதி செய்யபட்டு கட்சியில் பெயர் கூட வெளியாகியுள்ளது.
விஜய் அவர்கள் கட்சி தொடங்குவது உறுதி செய்யப்பட்டு கட்சியின் பெயரும் (Vijay Katchi Name) வெளியாகியுள்ளது. மேலும் இந்த கட்சியின் பெயர் தமிழக வெற்றி கழகம் (Tamizhaga Vetri Kazhagam) என்று அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி இதுவரை திரைப்படத்திற்காக பணியாற்றினேன் என்றும் இதன் பிறகு முழுவதுமாக தமிழக மக்களுக்காக பணியாற்றவுள்ளேன் என்றும் இது தன் கடமை என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கு முன்னரும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு உதவிகள் மற்றும் நிவாரணம் என அனைத்தையும் செய்து தான் வருகிறது.
மேலும் இக்கட்சியின் பெயர் குறித்த அறிவிப்பினை (Vijay Political News) தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள இவர், அப்பதிவில் விஜய் மக்கள் இயக்கம் பல வருடங்களாக தன்னால் முடிந்தவரை மக்கள் நலப் பணிகளையும் நிவாரண பணிகள் என்று அனைத்தையும் செய்து வருகிறது. எனினும் முழுமையாக மக்கள் பணிகளை தொடர முடியவில்லை, அதற்கு அதிகாரம் தேவைப்படுகிறது.
தற்போது நடைபெற்று வரும் அரசியல் பற்றியும் அவர் கூறியிருந்தார். மேலும் அவர் என்னுடைய தாய் தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் என்னால் முடிந்த வரையில் இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும். “எண்ணித் துணிக கருமம்” என்பது வள்ளுவன் வாக்கு.
அதன்படியே, “தமிழக வெற்றி கழகம்” என்கிற பெயரில் எமது தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய எமது கட்சியின்சார்பில் இன்று விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக 25.01.2024 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில், கட்சியின் தலைவர் மற்றும் தலைமை செயலக நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டு கட்சியின் அரசியலமைப்பு சட்டம் மற்றும் சட்டவிதிகள் முறைப்படி ஒப்புதல் வழங்கப்பட்டு அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றபின் வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும், தமிழ்நாட்டு தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்குமான எமது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள் கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து, மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன், தமிழ்நாட்டு மக்களுக்கான நம் அரசியல் பயணம் துவங்கும்.
இவ்வாறாக தனது அரசியல் பயணம் பற்றியும் இன்னும் பல தகவல்களையும் அப்பதிவில் அவர் கூறியுள்ளார். மேலும் முக்கியமாக அரசியலில் தன்னை முழுமையாக ஈடுப்படுத்திக்கொள்ள விரும்புகிறேன் எனவே இதற்கு முன்னர் ஒப்புக்கொண்ட படங்களை முடித்துவிட்டு முழுமையாக அரசியல் மற்றும் மக்கள் பணியில் ஈடுபடவுள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இவர் இதன் பிறகு படங்களில் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளழ.
#தமிழகவெற்றிகழகம் #TVKVijay pic.twitter.com/ShwpbxNvuM
— TVK Vijay (@tvkvijayoffl) February 2, 2024
இதையும் படியுங்கள்: அரசியல் கட்சியின் பெயரை அறிவித்த நடிகர் விஜய்.. |