Homeசெய்திகள்காதலின் தீபம் ஒன்று..! 40 ஆண்டுகளை கடந்த தம்பிக்கு எந்த ஊரு..!

காதலின் தீபம் ஒன்று..! 40 ஆண்டுகளை கடந்த தம்பிக்கு எந்த ஊரு..!

தமிழ் சினிமாவின் முன்ணனி நடிகராக இருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடித்த காதலின் தீபம் ஒன்று 40 ஆண்டுகளை கடந்து இன்றும் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது என்றே கூறலாம். ரஜினிகாந்தை ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தியது கே.பாலசந்தர் என்றாலும் அவரை ஆக்ஷன் ஹூரோவாக மாற்றியது எஸ்பி முத்துராமன் தான்.

அந்தவகையில் கிராமத்து பின்னணியில் உருவாகி மாஸ் ஹிட்டான படமாக அமைந்த படம் தான் தம்பிக்கு எந்த ஊரு. இந்த படத்தில் ஒரு பெரிய பணக்காரனின் மகன் ஊதரித்தனமாக சுத்தும் ரஜினியை தன் நண்பர் கண்காணிப்பில் இருக்க கிராமத்துக்கு அனுப்பி வைக்கிறார். தனது சிறு வயது முதல் நகரத்தில் வாழ்ந்த ரஜினி, கிராமத்து வாழ்க்கை மற்றும் அதன் எதார்த்தங்களை கற்றுக்கொடுக்கும் பாடமே தம்பிக்கு எந்த ஊரு (Thambikku Entha Ooru padam) படமாகும்.

மிகவும் சிம்பிளாகவும், அதே சமயம் ஒரு ரசிகர் கூட்டத்தை கொண்ட ரஜினி இந்த படத்தில் மிகவும் மாஸாக நடித்திருப்பார். தம்பிக்கு எந்த ஊரு படம் மாஸ் க்ளாஸாக உருவாகி ரசிகர்களை கவரந்த ஒரு படமாக அமைந்திருந்தது. ரஜினிக்கு என்று தனி ஸ்டைல் என்று ஒன்று இருக்கும். அந்த வகையில் பார்க்க போனால் தற்போது ரஜினிகென்று ஒரு லுக் இருக்கிறது. அதுபோல 80ஸ்களில் இளமையான தோற்றத்தில் உள்ள ரஜினியை யாராலும் மறக்க முடியாது. வகுடு எடுத்த தலை சீவிய ஹேர்ஸ்டைல், ஒல்லியான உடம்பு, பார்ப்பதற்கு ஹேணட்ஸ்மான லுக் என இந்த படத்தில் அழகாக தோன்றியிருப்பார்.

அதுவரை ஆக்ஷன் ஹூரோவாக பார்த்த ரஜினியை அந்த படத்தில் காமெடி மற்றும் ரொமாண்ஸ் என கலக்கியிருப்பார். இந்த படத்தில் அதுவரை பார்க்காத கோணத்தில் ரசிகர்கள் அவரை பார்த்திருப்பார்கள். அவரின் கதாப்பாத்திரம் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருமே விரும்பிய கதாப்பாத்திரமாக அமைந்தது.

இந்த படத்தில் வரும் காதலின் தீபம் ஒன்று.. இந்த பாடல் இன்றளவும் மக்கள் மனதை விட்டு நீங்காத ஒரு இடத்தை பிடித்துள்ளது என்றே கூறலாம். இந்த பாடலில் டக் இன் பண்ண பேண்ட் அண்ட் சர்ட், க்ளீன் ஷேவ் பண்ண முகம், கூலான நடையுடன் லைட் மூவ்மெண்ட்ஸை வெளிபடுத்தி இந்த பாடலுக்கு அவர் சிறப்பாக நடித்திருப்பார்.

இந்த பாடலை எஸ்பிபியும், ஜானகியும் பாடியிருப்பார்கள். இந்த பாடலை இசைஞானி இளையராஜா கம்போசிங் செய்வதற்கு முன்பு உடல்நல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த பாடல் இளையராஜாவுக்கு மட்டுமல்ல, ரஜினியின் எவர்கீரின் மெலடியாகவும் மாறியது.

இந்த படத்தில் ஜனகராஜ், காமெடிக்கு முக்கியத்தும் கொடுத்து நடித்திருப்பார். அதே சமயம் ஜனகராஜ் காமெடியனாக அந்த ரோலில் நடித்திருந்தாலும், ரஜினியின் வெகுளித்தனமான நடிப்பு இந்த படித்தில் அவரின் நகைச்சுவை திறனை வெளிப்படுத்தி இருக்கும். கதிரை பக்குவமாக அறுப்பது, மாடு குளிப்பாட்டுவது என எதார்த்தமான நகைச்சுவையில் அனைவரையும் சிரிக்க வைத்திருப்பார்.

அதிலும் கட்டில் அமர்ந்து அவர் புத்தகம் படிக்கும் போது கட்டிலில் பாம்பு வரும், அந்த காட்சியில் அவர் சுமார் 2 நிமிடம் வரை பாம்பு என்று சொல்வதற்கு அவ்வளவு கஷ்டப்பட்டு, முகபாவனைகளை காட்டி அனைவரையும் வயிறு வலிக்க சிரிக்க வைத்திருப்பார். அந்த படத்தில் இருந்து ரஜினி நடிக்கும் படங்களில் பாம்பு சென்டிமென்டாக வைப்பது தொடர்ந்தது.

இளைஞர்களை மட்டும் கவரும் விதமாக ஆக்ஷன் படத்தில் நடித்து வந்த ரஜினி, தம்பிக்கு எந்த ஊரு படம் (Thambikku Entha Ooru movie) அனைவரும் கவரும் விதமாக சூப்பர் ஹிட் அடித்தது என்றே கூறலாம். இந்த படம் வெளியாகி இன்றுடன் 40 வருடங்களை கடந்துள்ளது (40 years completed Thambikku Entha Ooru) என்பது குறிப்பிடத்தக்கது.

40 years completed Thambikku Entha Ooru
மேலும் படிக்க: ப்ளூ சட்டையை விளாசிய விஜய் ஆண்டனி..! சம்பவம் என்ன தெரியுமா?
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular