தமிழ் சினிமா துறையில் வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்தவர் முன்னணி நடிகரான சியான் விக்ரம். இவருக்கு இன்று பிறந்தநாள். இவரின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று இவர் நடித்து வரும் தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோவை தங்கலான் (Thangalaan making video is out) படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
பா. இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் சியான் விக்ரம் நடிக்கும் படம் தான் (Vikram Thangalaan Movie) தங்கலான். இந்த படத்தில் விக்ரம் உடன் இணைந்து மாளவிகா மோகனன், பசுபதி, பார்வதி திருவோத்து மற்றும் முத்து குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல்ராஜா தயாரித்து உள்ளார்.
இந்த தங்கலான் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீசுக்கு தற்போது தயாராகி வருகிறது. இந்த படத்தை வரும் ஜூன் மாதம் 26-ம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் விக்ரமின் பிறந்த நாளான இன்று தங்கலான் படக்குழுவினர் இந்த படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளனர். அந்த மேக்கிங் வீடியோவில் (Thangalaan Movie Making Video) விக்ரம் அவர் உடல் வருத்தி ரிஸ்க் எடுத்து நடித்துள்ளது அனைவருக்கும் தெரிகிறது. இந்த படத்திற்காக விக்ரம் சுமார் 30 கிரோ வரை உடல் எடையை குறைத்துள்ளார். படத்தில் இடம்பெறும் காட்சிக்கு விக்ரம் அடித்து, மிதித்து சித்திரவரை செய்யும் காட்சிகள் அந்த மேக்கிங் வீடியோவில் உள்ளது.
உடலை வருத்தி தங்கலான் படத்தில் மிகவும் சிறப்பாக விக்ரம் நடித்துள்ளார். இந்த படத்திற்காக கண்டிப்பாக விக்ரமுக்கு தேசிய விருது கிடைக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். அந்த அளவிற்கு விக்ரம் கடினமாக அந்த படத்திற்காக உழைத்துள்ளார் என்பது அந்த மேக்கிங் வீடியோவில் (Making Video for Thangalaan Movie) தெரிகிறது. இந்த மேக்கிங் வீடியோவை விக்ரம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Thank you my team #Thangalaan for this fiery yet beautiful ‘tribute’. 💛
— Vikram (@chiyaan) April 17, 2024
Glimpses link 🔗 https://t.co/3KqDtpb4a1@Thangalaan @beemji @GnanavelrajaKe @StudioGreen2 @OfficialNeelam@jiostudios
மேலும் படிக்க: Thangalaan Movie Release Date: தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு..! |