உலக அதிசயங்களை மிஞ்சும் ஓர் அதிசயம். ஆயிரம் வருடங்களில் ஆறுமுறை நிலநடுக்கம் கண்டும், பழந் தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் தஞ்சை பெருவுடையார் கோயில் Thanjai Periya Kovil என்னும் அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் ஆலயம் உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த கோயில் தஞ்சாவூரில் உள்ள காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. சோழர்களின் சாம்ராஜ்யத்தை இன்றளவும் அதே கம்பீரத்துடன் பிரதிபலிக்கிறது. வரலாற்று மிக்க இந்த கோயிலை எப்படி அந்த காலக்கட்டத்திலேயே கட்டி முடித்தார்கள் என்பது இன்றுவரை அதிசயமாக உள்ளது.
Table of Contents
Thanjai Periya Kovil History பெயர்க்காரணம்
இராஜராஜேஸ்வரம் என முதலில் அழைக்கப்பட்ட பிரகதீஸ்வரர் ஆலயம் தற்போது
தஞ்சை பெருவுடையார் கோயில் என்று அழைக்கப்படுகிறது. மராட்டிய மக்களால் பிரகதீஸ்வரர் (Brihadeshwara Temple) என்று அழைக்கப்பட்டது.
கோயில் கோபுரத்தின் அதிசயம் Thanjai Periya Kovil Gopuram in Tamil
இந்த கோயிலின் கோபுரத்தின் நிழல் தரையில் விழுவதில்லையாம். கோயிலின் கோபுரத்தின் மேல் வைக்கப்பட்டுள்ள 80 டன் எடையுள்ள கலசவடிவிலான மேற்கூரைதான். அப்படி என்ன அந்த கலசத்தில் அதிசயம் என்றால் ஒரே கல்லால் ஆன 80 டன் எடையுள்ள அந்த கல்லை எப்படி மேலே எடுத்துச் சென்றிருப்பார்கள் என்றுதான். அதுமட்டுமல்லாமல் கர்ப்பகிரகத்தில் அதிக அளவு மின்காந்த ஆற்றல் வெளிப்படுவதாலும் அந்த ஆற்றல் மேலே உள்ள ஒரே கலசத்தால் ஆன கல்லில் எதிரொலிக்கப்பட்டு ஒரு நேர்மறையான ஆற்றலை அங்கு வரும் பக்தர்களுக்கு கொடுக்கிறது. இதனால் அங்கு வரும் பக்தர்களுக்கு மன நிம்மதி கிடைப்பதாக உணருகிறார்கள்.
ThanjaiPeriya Kovil அமைப்பு
கோயிலின் நுழைவு வாயிலை அடுத்து, ஐந்து அடுக்குகள் கொண்ட நுழைவு வாயில் கேரளாந்தகன் நுழைவு வாயில் என்றும், மூன்று அடுக்குகள் கொண்ட ராஜராஜன் திருவாயில் அமைந்துள்ளது. தமிழின் பெருமைகளை உலகிற்கு உணர்த்தும் வகையில் சிவ லிங்கத்தின் உயரம் 12 அடி, சிவ லிங்கத்தின் பீடத்தின் உயரம் 18 அடி, கோவில் கோபுரத்தின் உயரம் 216 அடி, சிவ லிங்கத்திற்கும் நந்திக்கும் உள்ள தொலைவு 247 அடி ஆகும்.
- இதில் சிவ லிங்த்தின் உயரம் 12 அடி (தமிழ் உயிரெழுத்துக்கள் 12)
- சிவ லிங்கத்தின் பீடத்தின் உயரம் 18 அடி (தமிழ் மெய் எழுத்துக்கள் 18)
- கோபுரத்தின் உயரம் 216 அடி (தமிழ் உயிர்மெய் எழுத்துக்கள் 216)
- நந்திக்கும் சிவ லிங்கத்திற்கும் உள்ள தொலைவு 247 (தமிழ் உயிர்மெய் எழுத்துக்கள் 247)
தஞ்சை பெரியக் கோவில் நந்தி சிலை Thanjavur Big Temple Nandi
தஞ்சை பெரியக் கோவிலில் உள்ள நந்தி சிலை ஒரே கல்லால் செதுக்கப்பட்டது. ஆனால் இந்த நந்தி சிலை மராட்டியர்களால் வைக்கப்பட்ட நந்தி சிலையாகும். ராஜராஜ சோழனால் வைக்கப்பட்ட நந்தி சிலை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே சென்றதால் அதனால் அதிர்ச்சியும், வியப்பும் அடைந்த மராட்டிய மக்கள் அதனை அகற்றிவிட்டு புதிய நந்தி சிலையை அங்கு நிறுவினார்கள். ஆனாலும் அந்த பழைய நந்தி சிலை கோயிலின் உள்ளே வைக்கப்பட்டுள்ளது.
தஞ்சை பெருவுடையார் கோயில் கட்டுமானம்
இலங்கை சென்று வந்த ராஜராஜ சோழன் அங்கு பிரம்மாண்ட உருவம் கொண்ட புத்தர் கோவில்களை கண்டார். இதே போன்று சைவக் கடவுளான சிவனுக்கு ஒரு பிரமாண்ட கோயிலை கட்ட நினைத்தார். இலங்கையில் இருந்து திரும்பியதும் அதற்கான ஏற்பாடுகளை அவர் தொடங்கினார். குஞ்சரமல்லன் ராஜராஜ பெருந்தச்சன் என்னும் கட்டிட நிபுணர்களால் கட்டப்பட்டது என கல்வெட்டுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
சுரங்கப்பாதைகள் மற்றும் கிரானைட் கற்கள்
இந்த கோயிலை சுற்றி நிறைய சுரங்கபாதைகள் இருப்பதாக கூறப்பட்டது. இந்த சுரங்க பாதைகள் ராஜா, ராணி, தளபதி மற்றும் முனிவர்கள் ஆகியோர் ரகசியமாக சென்றுவர பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் பாதி சுரங்கங்களை மூடிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த கோயிலை கட்டுவதற்கு கிட்டதட்ட 1,30,000 டன் கிரானைட் கற்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது. ஆனால் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் அருகில் எந்த மலையும் இல்லாத போது 50 மைல் தொலைவில் இருந்து எவ்வாறு கற்களை எடுத்து வந்து கோயிலை கட்டியிருப்பார்கள் என வியப்பாக உள்ளது. எந்த ஒரு தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில் இவ்வளவு நேர்த்தியாகவும், நுட்பமாகவும் இக்கோயிலை வடிவமைக்கப்பட்டது ஆச்சரியம் தான்.
ராஜராஜ சோழன் (Raja Raja Cholan) என்னும் பொன்னியின் செல்வன்
அருண்மொழிவர்மன் என்னும் ராஜராஜ சோழன் ஒரு அரசனாக மட்டுமல்லாமல், அனைவரும் போற்றப்படும் மாமன்னனாகவும் இருந்துள்ளார். காரணம் ஒரு அரசானாக இருந்திருந்தால் கோவிலை கட்டி முடித்த பிறகு அவருடைய பெயரை மட்டும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருக்கும். ஆனால் அவர் அவ்வாறு செய்யாமல் கோவிலை கட்டுவதற்கு உதவிய அனைவரின் பெயர்களையும் கல்வெட்டில் பதிய செய்துள்ளார்.
கட்டுமான பணியில் இருந்தவர்கள், அவர்களுக்கு தண்ணீர் குடுப்பவர்கள், உணவளித்தவர்கள், முடி திருத்தம் செய்தவர்கள் என அனைவரின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அரசன் ராஜராஜ சோழன் மக்கள் மீது கொண்ட அன்பையும் அறிய முடிகிறது.
பெரிய கோவிலின் விழாக்கள்
- பிரம்மோற்சவம்
- இராசராசசோழன் பிறந்தநாள் விழா
- அன்னாபிசேகம்
- திருவாதிரை
- ஆடிப்பூரம்
- கார்த்திகை
- பிரதோசம்
- சிவராத்திரி
- தேரோட்டம்
தஞ்சை பெரிய கோவில் – FAQS
1. தஞ்சை பெரிய கோவிலை கட்டியது யார்?
முதலாம் இராசராச சோழன் இக்கோயிலைக் கட்டுவித்தார்.
2. தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்ட ஆண்டு?
1003க்கும் 1010ஆம் ஆண்டிற்கும் இடையில் கட்டப்பட்டது.
3. தஞ்சை பெரிய கோவிலின் தலைமை சிற்பி யார்?
குஞ்சர மல்லன் ராஜராஜப்பெருந்தச்சன்
4. தஞ்சை பெரிய கோவில் கட்டி எத்தனை ஆண்டுகள் நிறைவு பெற்றது?
2010 ஆவது ஆண்டோடு 1000 ஆண்டுகள் நிறைவடைந்தன.
5. தஞ்சை பெரிய கோவிலின் உயரம் என்ன?
பெரிய கோவிலின் உயரம், 216 அடி. முழுக்க முழுக்க கற்களை வைத்து எழுப்பப்பட்டுள்ள ஒரு பிரமாண்ட கற்கோவில்.