பெரம்பலூரில் பிரசித்தி பெற்ற கத்தோலிக்க கிறிதஸ்தவ ஆலயம் தான் புனித பனிமய மாத கோயில். இந்த கோவிலின் 75-ம் ஆண்டு பவள விழாவை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் புதிய கொடிமரம் ஒன்று நடப்பட்டு நேற்று (ஏப்ரல் 21) ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை (panimaya matha kovil kodiyetram) கொடியேற்றப்பட்டது.
பெரம்பலூரில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயமான புனித பனிமய மாதா கோவில் கட்டப்பட்டு 75-ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இதனை கொண்டாடும் விழாவில் இக்கோயிலில் பவள விழாவை (punitha panimaya matha kovil pavala vizha) கும்பகோணம் மறைமாவட்டம் ஆயர் ஏ. ஜீவானந்தம் கொடிமரத்தை மந்திரித்து, புதிதாக காெடி பாடலை வெளியிட்டு கொடியேற்றி வைத்தார்.
கொடியேற்றத்தை தொடர்ந்து ஆயர் ஜீவானந்தம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இந்த திருப்பலி கூட்டுப் பாடலுடன் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த திரளான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
இந்த (Panimaya Matha Church) விழாவுக்கான ஏற்பாடுகளை, பனிமயமாதா கோயில் பங்குத் தந்தை ஆ. ராஜமாணிக்கம் முன்னிருந்து ஏற்பாடுகளை செய்தார். அருள் சகோதரிகள், பங்குப் பேரவை, திருவிழாக் குழுவினர், கத்தோலிக்க சங்கத்தினர் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.